For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசிப் போட்டியில் விக்கெட் வீழ்த்திய கில்கிறைஸ்ட்

தர்மசாலா: சுனில் கவாஸ்கர் பந்து வீசவும் செய்துள்ளார். அதில் அவர் ஒரே ஒரு விக்கெட்டைக் கைப்பற்றவும் செய்துள்ளார். அந்த ஒரு விக்கெட்டால் பாகிஸ்தானின் ஜாகிர் அப்பாஸை இன்றளவு புலம்பவும் வைத்துள்ளார் - காரணம் அவரது சதத்தைத் தடுத்ததால். அதே பாணியில் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் கேப்டன் கில்கிறைஸ்ட்டுக்கு மறக்க முடியாத ஒரு விக்கெட் கிடைத்துள்ளது.

தீவிர கிரிக்கெட்டிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெற்றார் கில்கிறைஸ்ட். இந்த போட்டியை மறக்க முடியாததாக மாற்ற நினைத்த அவர் பந்து வீச்சாளர் அவதாரம் எடுத்தார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின்போது அவர் ஒரு ஓவர் பந்து வீச முடிவு செய்து ஆப் ஸ்பின்னராக அவதாரம் எடுத்தார்.

முதல் பந்திலேயே ஹர்பஜன் காலி

முதல் பந்திலேயே ஹர்பஜன் காலி

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்பஜன் சிங், கில்கிறைஸ்ட்டின் முதல் பந்தை எதிர்கொண்டார். முதல் பந்தை வீசினார் கில்கிறைஸ்ட். அதை ஓங்கி அடித்தார் ஹர்பஜன் சிங். பவுண்டரி நோக்கி மேலே பாய்ந்த பந்தை, லைனுக்கு அருகே நின்று குர்கிரீத் சிங் கப்பென்று கவ்விக் கொள்ள ஹர்பஜன் அவுட்.

துள்ளிக் குதித்த கில்லி

துள்ளிக் குதித்த கில்லி

கில்கிறைஸ்ட்டுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஆக்ரோஷத்துடன் சந்தோஷக் கூக்குரலிட்டார். இதுதான் அவரது வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த முதல் விக்கெட்டாகும்.

13வது பந்தில் வந்த விக்கெட்

13வது பந்தில் வந்த விக்கெட்

இதற்கு முன்பு 648 போட்டிகளில் மொத்தமே 2 ஓவர்கள்தான் பந்து வீசியிருந்தார் கில்கிறைஸ்ட். தனது 13வது பந்தில் அவருக்கு விக்கெட் கிடைத்தது பெரிய ஆச்சரியம்தான்.

கங்னம் ஆட்டம்

கங்னம் ஆட்டம்

முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் கங்னம் ஸ்டைல் ஆட்டத்தையும் போட்டு அசத்தி விட்டார் கில்கிறைஸ்ட்.

தோளில் தூக்கி விடை கொடுத்த அணியினர்

தோளில் தூக்கி விடை கொடுத்த அணியினர்

நேற்றுடன் தீவிர கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்ற அருமையான ஆட்டக்காரரான கில்கிறைஸ்ட்டை பஞ்சாப் அணி வீரர்கள் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்து பிரியாவிடை கொடுத்தனர்.

பஜ்ஜியை பழி வாங்கி விட்டேன்

பஜ்ஜியை பழி வாங்கி விட்டேன்

பின்னர் பேசிய கில்கிறைஸ்ட், ஹர்பஜன் சிங் என்னைப் பலமுறை அவுட்டாக்கியுள்ளார். இன்று அவரை நான் அவுட்டாக்கி விட்டேன். அதனால்தான் ஹர்பஜன் பாணியில் கங்னம் ஆட்டம் போட்டேன். ரசிகர்களும் அதை வரவேற்றனர் என்றார்.

பை பை கில்லி.. உங்களை மறக்க மாட்டோம்

Story first published: Sunday, May 19, 2013, 13:37 [IST]
Other articles published on May 19, 2013
English summary
Just like Sunil Gavaskar always had a twinkle in his eyes whenever he spoke about denying Zaheer Abbas a century by getting his only Test scalp, Adam Gilchrist will tell you the 'tale' of how he got Harbhajan Singh out with last delivery of his competitive career. Playing the last match of his competitive career, the 41-year-old decided to bring the off-spinner in him to the forefront. The first ball that he bowled saw Harbhajan try a wild slog and Gurkeerat Singh at boundary line took an easy catch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X