For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷேவாக், கம்பீரை அப்படியே மறந்து விடக் கூடாது... சொல்கிறார் கிரண் மோரே

மும்பை: ஷிகார் தவன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடுவதால் வீரேந்திர ஷேவாக் மற்றும் கெளதம் கம்பீர் ஆகியோரை மறந்து விட வேண்டும் என்று யாரும் நினைத்து விடக் கூடாது. தவன், சர்மா ஜோடியி்ல் யாராவது பார்மை இழந்தால் ஷேவாக்கோ அல்லது கம்பீரோ மீண்டும் அணிக்குத் திரும்ப முடியும் என்று கூறியுள்ளார் முன்னாள் விக்கெட் கீப்பரும், முன்னாள் தலைமைத் தேர்வாளருமான கிரண் மோரே.

அதேபோல ஜாகிர்கானையும் யாரும் மறந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஆரோக்கியமான போட்டி எப்போதுமே உண்டு. இதுதான் நிரந்தரம் என்று எதிலும் செட்டிலாகி விட முடியாது. எனவே ஷேவாக், கம்பீர் ஆகியோருக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன என்றும் மோரே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி...

போட்டி தேவை

போட்டி தேவை

எப்போதுமே கிரிக்கெட்டில் போ்ட்டி நிலவுவது ஆரோக்கியமானதுதான். தற்போது அப்படிப்பட்ட ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு இடம் கிடைக்கிறது.

ஷேவாக் மீண்டும் வரலாம்

ஷேவாக் மீண்டும் வரலாம்

தற்போது விளையாடி வரும் வீரர்களில் யாராவது பொருத்தமற்றவர்களாக மாறினால் அப்போது கம்பீரோ, ஷேவாக்கோ, ஏன் ஜாகிர் கானோ கூட மீண்டும் விளையாட வரலாம்.

அனுபவத்தைப் புறக்கணித்து விட முடியாது

அனுபவத்தைப் புறக்கணித்து விட முடியாது

கடினமான டூர்களில் அனுபவசாலியான வீரர்களும் தேவை. எனவே எந்த வீரரையும் நாம் முடிவு கட்டி விட முடியாது.

ஷேவாக், கம்பீர் விளையாட வேண்டும்

ஷேவாக், கம்பீர் விளையாட வேண்டும்

ஷேவாக்கும், கம்பீரும் தொடர்ந்து உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட வேண்டும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் நல்லது என்றார் மோரே

Story first published: Sunday, July 14, 2013, 13:09 [IST]
Other articles published on Jul 14, 2013
English summary
India's new ODI opening combination of Shikhar Dhawan and Rohit Sharma might have clicked, but former chief selector Kiran More is wary of dismissing the comeback chances of senior batsmen Virender Sehwag and Gautam Gambhir. "Competition is a healthy sign for Indian cricket. There is a good healthy competition going on. Whoever performs will be in the team. If somebody is unfit then Gambhir or Sehwag, or (even) Zaheer Khan, can walk in.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X