For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சன் ரைசர்ஸ் அணியின் இலங்கை கேப்டனை எதிர்த்து ஹைதராபாத்தில் போராட்டம்!

By Mayura Akilan
Protest against Sangakkara at Hyderabad by Tamil fronts
ஹைதராபாத்: சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் சங்ககராவிற்கு எதிராக ஹைதராபாத்தில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் இடம் பெற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த இலங்கை வீரர்கள் இந்த சீசனில் விளையாடவில்லை. ஆனால் சன் குழும நிர்வாகம் வாங்கியுள்ள சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இலங்கை வீரர் சங்ககரா கேப்டனாக இருக்கிறார்.

இந்த நிலையில் சங்ககரா பதவியில் இருந்து விலக வலியுறுத்தியும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் இன்று திடீர் போராட்டம் நடைபெற்றது ஐதராபாத்தில் ஐ.பி.எல். வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் முன் இந்த போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டது எந்த அமைப்பு என்ற விபரம் தெரியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Story first published: Thursday, April 25, 2013, 14:22 [IST]
Other articles published on Apr 25, 2013
English summary
A protest against Sangakkara outside the hotel where he had stayed by unidentified persons. It is learnt that unidentified persons had staged a protest against Sangakkara outside the hotel where he was staying. He was selected to play for the new franchise the ‘Sunrises Hyderabad’ and named as the captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X