For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி ‘தங்க பேட்’ உத்தரகாண்டில் பலியானவர்களுக்கு சமர்ப்பணம்: ஷிகர் தவான் உருக்கம்

Shikhar Dhawan
பிர்மிங்ஹாம்: ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியில் தான் பெற்ற தங்க பேட்டை உத்தரகாண்ட் பேரழிவில் பலியானவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக அறிவித்துள்ளார் ஷிகர் தவான்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில், சிறப்பாக விளையாடி இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா. 363 ரன்கள் எடுத்து இத்தொடரில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவானை கௌரவிக்கும் விதமாக அவருக்கு 'தங்க பேட்' பரிசளிக்கப்பட்டது.

'தங்க பேட்டை' பெற்றுக் கொண்டு அதற்கு நன்றி தெரிவித்த ஷிகார் தவான், பின்னர் கூறியதாவது, ' எனது திறமைக்காக வழங்கப்பட்ட இந்த தங்க பேட் விருதை உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு சமர்பிக்கிறேன். அங்கு தவிக்கவிடப்பட்டுள்ளவர்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டி நான் பிரார்த்திக்கிறேன்' என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

ஏற்கனவே, இது போன்று, டெல்லி பேருந்தில் கற்பழித்துக் கொல்லபட்ட மருத்துவ மாணவிக்காக யுவராஜ் சிங் தனது விருதை வழங்கியதும், கொல்கத்தா மருத்துவமனை தீவிபத்தில் பலியானவர்களுக்கு மனோஜ் திவாரி தனது விருதை சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 24, 2013, 8:59 [IST]
Other articles published on Jun 24, 2013
English summary
Winner of the coveted Golden Bat Shikhar Dhawan made a touching gesture as he dedicated his award to the victims who had lost their lives in the recent flood that affected the state of Uttarakhand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X