For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா? நியாயம் கேட்கும் ஸ்ரீசாந்த்

நியூடெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது பிசிசிஐ-யால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

கடந்த 2013 ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் உட்பட மூன்று வீரர்களை ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்ட புகாரில் டெல்லி காவல்துறை கைது செய்தது. பிசிசிஐ ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது.

ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டை எதிர்த்த வழக்கில் வெற்றி பெற்று சிறை தண்டனையில் இருந்து தப்பினார் ஸ்ரீசாந்த்.

இழுத்துக் கொண்டே போகும் வழக்கு

இழுத்துக் கொண்டே போகும் வழக்கு

எனினும், பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை நீக்கவில்லை. அதற்காக ஸ்ரீசாந்த் நீதிமன்றங்களில் போராடி வருகிறார். கேரள உயர்நீதிமன்றம் தடை தொடரும் என அறிவித்த நிலையில், அடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

வாய்ப்புகள் உள்ளன

வாய்ப்புகள் உள்ளன

ஸ்ரீசாந்துக்காக மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். தனது வாதத்தில், "ஸ்ரீசாந்துக்கு தற்போது 35 வயது ஆகிறது. இனிமேல் அவரால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது. அது கிட்டதட்ட முடிந்து விட்டது. ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்களில் அவருக்கு இரண்டு - மூன்று வாய்ப்புகள் வந்துள்ளன. இதில் ஸ்ரீசாந்தை ஆட அனுமதிக்க வேண்டும்" என கூறினார்.

இடைக்கால தடையாவது வேண்டும்

இடைக்கால தடையாவது வேண்டும்

மேலும், "பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடை மிகவும் மோசமானது. இதற்கு இடைக்கால தடையாவது விதித்து ஸ்ரீசாந்தை இங்கிலாந்தில் விளையாட அனுமதிக்க வேண்டும்" எனவும் வாதாடினார் சல்மான் குர்ஷித். அடுத்து அசாருதீனையும் இந்த வழக்குக்குள்ளே இழுத்து நீதிபதியிடம் நியாயம் கேட்டார் அவர்.

அசாருதீன் மட்டும் எப்படி?

அசாருதீன் மட்டும் எப்படி?

அசாருதீனுக்கும் பிசிசிஐ வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடை நீதிமன்றத்தால் விலக்கப்பட்டது. அதை உதாரணம் காட்டி, அவருக்கு வாழ்நாள் தடையை நீக்கும் போது ஸ்ரீசாந்துக்கும் வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என வாதாடினார். இதனால், கிரிக்கெட் அரங்கில் லேசான சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விசாரணை தள்ளி வைப்பு

விசாரணை தள்ளி வைப்பு

அதே சமயம், இந்த வழக்கில் டெல்லி காவல்துறை ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் மற்றும் பலர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றத்தின் முடிவு வரும் வரை காத்திருக்குமாறு கூறி, உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாம் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

Story first published: Saturday, December 8, 2018, 13:10 [IST]
Other articles published on Dec 8, 2018
English summary
Sreesanth asks Why my ban was not removed while Azharuddin ban removed
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X