For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே!

திருவனந்தபுரம்: முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆட தொடங்கி உள்ள கேரள வீரர் ஸ்ரீசாந்த் தற்போது ஐபிஎல் ஏலத்திற்கு பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்த்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீசாந்த் மீதான தடை காலம் முடிவிற்கு வந்த நிலையில் மீண்டும் முதல்தர போட்டிகளில் அவர் ஆடி வருகிறார்.

மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா? மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

பழைய பார்மிற்கு திரும்பி வந்து இருக்கும் ஸ்ரீசாந்த் தற்போது பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். இடையில் தடை காலத்தில் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி, சினிமா என்று பிசியாக இருந்தார்.

அரசியல்

அரசியல்

எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றதும் பாஜகவில் சேர்ந்து அரசியலில் தீவிரம் காட்டினார். ஆனால் அரசியலிலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. பாஜகவில் இவர் உறுப்பினராக உள்ள நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் 9 வருடங்களுக்கு பின் ஆட தொடங்கி உள்ளார்.

 மீண்டும் ஆடி வருகிறார்

மீண்டும் ஆடி வருகிறார்

சையது முஷ்டாக் கோப்பை போட்டிக்கான கேரளா அணியில் ஸ்ரீசாத் சேர்க்கப்பட்டடார். கேரளா அணிக்காக ஆடிய இவர் சிறப்பாக பந்து வீசி கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் ஸ்ரீசாந்த் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆட உள்ளார். இதற்காக ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரீசாந்த் பதிவு செய்துள்ளார்.

பதிவு

பதிவு

தற்போது 39 வயதாகும் ஸ்ரீசாந்த் சிறப்பாக பந்து வீசுவதால், இவரை ஏலத்தில் எடுக்க மூன்று அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளது என்கிறார்கள். அதன்படி ராஜஸ்தான் அணி இவரை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் உள்ளார். இதனால் இவர் ஸ்ரீசாந்தை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது.

 கேப்டன்

கேப்டன்

சஞ்சு சாம்சனின் கேப்டன்சியின் கீழ்தான் சையது முஷ்டாக் கோப்பையில் ஸ்ரீசாந்த் ஆடினார். இதனால் ஸ்ரீசாந்தை ராஜஸ்தான் அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. அந்த அணியிலும் கூட ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஜோடியாக பவுலிங் செய்ய ஸ்பீட் பவுலர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை

சென்னை

இதுபோக பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் இவரை எடுக்க வாய்ப்புள்ளது. உமேஷுக்கு மாற்றாக ஸ்ரீசாந்தை பெங்களூர் அணி எடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ரெய்னாவின் பரிந்துரை காரணமாக சென்னை அணியும் இவரை எடுக்க திட்டமிடும் என்று கூறுகிறார்கள் .

Story first published: Saturday, January 23, 2021, 14:21 [IST]
Other articles published on Jan 23, 2021
English summary
Sreesanth registered his name for IPL Mini Auction 2021 after his come back in Syed Mushtag Trophy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X