For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2013 ஐபிஎல் பார்ட்டி முடிந்த உடன்.. தீவிரவாதிகள் வார்டில் அடைத்து.. 12 நாட்கள் டார்ச்சர்.. ஷாக்!

திருவனந்தபுரம் : கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 2013 ஐபிஎல் தொடரின் இடையே காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

Recommended Video

Sreesanth reveals his experience of Match Fixing arrest

அப்போது தன் வாழ்க்கையே ஒரு நொடிப் பொழுதில் மாறி விட்டதாக கூறி உள்ளார். அப்போது என்ன நடந்தது என அவர் ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.

தன்னை தீவிரவாதிகள் வார்டில் அடைத்து வைத்ததாகவும், தொடர்ந்து 12 நாட்கள், தினமும் 16-17 மணி நேரம் கடுமையாக துன்புற்றதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்

சர்ச்சை வீரர்

சர்ச்சை வீரர்

ஸ்ரீசாந்த் துவக்கம் முதலே இந்திய அணியில் சர்ச்சை வீரராக வலம் வந்தார். போட்டிகளில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் அவர், விக்கெட் எடுத்தால் அதிக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். 2008 ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் இவரை அறைந்ததும் அப்போது பெரும் சர்ச்சை ஆனது.

2013 ஐபிஎல் சர்ச்சை

2013 ஐபிஎல் சர்ச்சை

இந்த நிலையில் ஸ்ரீசாந்த் 2013 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வந்தார். அந்த தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பார்ட்டி கொண்டாடி வந்த நிலையில் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கினார் ஸ்ரீசாந்த்.

மூன்று வீரர்கள் கைது

மூன்று வீரர்கள் கைது

அப்போது மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூன்று வீரர்கள் மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கைது செய்யப்பட்டனர். அதில் ஸ்ரீசாந்த் மட்டுமே இந்திய அணியில் ஆடிய வீரர். அதனால், அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது என்ன நடந்தது என்பது பற்றி ஸ்ரீசாந்த் விவரித்துள்ளார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அப்போது பார்ட்டி கொண்டாடத்தில் இருந்து தீவிரவாதிகள் வார்டுக்கு அழைத்து சென்று தன்னை அடைத்ததாகவும், 12 நாட்கள் துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் கூறினார். மேலும், தன் குடும்பம் தனக்கு ஆதரவாக இருந்ததையும் குறிப்பிட்டார்.

தீவிரவாதிகள் வார்டில்..

தீவிரவாதிகள் வார்டில்..

"என் வாழ்க்கையை பார்த்தீர்கள் என்றால், ஒரு வினாடிதான்.. அது போட்டிக்கு பின் நடந்த பார்ட்டி. அங்கே இருந்து என்னை தீவிரவாதிகள் வார்டுக்கு அழைத்து சென்றனர். நான் பலியாடு போல உணர்ந்தேன். 12 நாட்களுக்கு தினமும் 16-17 மணி நேரம் எனக்கு துன்புறுத்தலாக இருந்தது." என்றார் ஸ்ரீசாந்த்.

குடும்பம்

குடும்பம்

மேலும், "சில நாட்கள் கழித்து என் மூத்த சகோதரர் என்னை பார்க்க வந்தார். அப்போது தான் என் குடும்பம் நன்றாக இருக்கிறது என தெரிந்து கொண்டேன். என் குடும்பத்தினர் எனக்கு ஊக்கம் அளித்தார்கள். அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர்" எனக் கூறினார்.

10 வினாடி யோசியுங்கள்

10 வினாடி யோசியுங்கள்

"எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் 10 வினாடிகள் யோசியுங்கள். இதுவும் கடந்து போகும் என உங்களுக்கு புரியும். எதை அடைய வேண்டுமோ அதை அடையுங்கள். இந்த உலகம் என்ன சொல்லுமோ என காத்திருக்காதீர்கள்" எனவும் கூறினார் ஸ்ரீசாந்த்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த செய்தியை கேட்ட போது எப்படி உணர்ந்தீர்கள் என கேட்ட போது முதலில் தன் மனைவி தனக்கு மெசேஜ் செய்ததாகவும், பயிற்சி முடிந்து அதை பார்த்த போது அது ஒரு ஜோக் என நினைத்ததாகவும் ஸ்ரீசாந்த் கூறினார்.

புகைப்படம்

புகைப்படம்

பின்னர் அது உண்மை என தெரிந்து கொண்டதாக கூறிய அவர், பலரும் சுஷாந்த் சிங் ராஜ்புத் உடலை வெளியே எடுத்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பரப்பியதை குறிப்பிட்டு, தான் வருத்தம் அடைந்ததாக கூறினார். மேலும், நல்ல வேளையாக நான் ஜெயிலுக்கு போவது அல்லது வெளியே வருவதை யாரும் புகைப்படம் எடுக்கவில்லை. என் குழந்தைகள் அதை பார்க்க மாட்டார்கள்.

Story first published: Thursday, July 2, 2020, 14:20 [IST]
Other articles published on Jul 2, 2020
English summary
Sreesanth reveals his experience of match fixing arrest in 2013.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X