நெவர் கிவ் அப்.. சொன்னபடியே செய்து காட்டிய ஸ்ரீசாந்த்.. இப்படி ஒரு அதிரடி ஆட்டமா..அதிர்ந்த மைதானம்!

சென்னை: விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கேரள வீரர் ஸ்ரீசாந்த் மிகவும் அதிரடியாக பவுலிங் செய்து வருகிறார்.

ஐபிஎல் ஆட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறி 2013ல் ஸ்ரீசாந்திற்கு தடை விதிக்கப்பட்டது. கிரிக்கெட் ஆடாத காரணத்தால் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் எல்லாம் ஸ்ரீசாந்த் நின்றார். அதேபோல் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டார்.

இந்த 7 பேர்தான் கேம் சேஞ்சர்ஸ்.. கோலி எடுத்த முடிவால் அதிர்ந்து போன பிசிசிஐ.. இப்படி பார்த்ததே இல்லை

இவர் மீதான தடை முடிவிற்கு வந்துள்ள நிலையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்ரீசாந்த் ஆட தொடங்கி உள்ளார். முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார்.

 எப்படி

எப்படி

இந்த நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் விளையாடலாம் என்று ஆர்வமாக இருந்த ஸ்ரீசாந்த் பெயர் தற்போது ஏலம் விடபடும் வீரர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் இவருக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனாலும் தொடர்ந்து இவர் முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார்.

தேர்வாகவில்லை

தேர்வாகவில்லை

இவரின் வயதை காரணம் காட்டியும், பல வருடமாக இவர் கிரிக்கெட் ஆடாத காரணத்தாலும் இவரின் மீது ஐபிஎல் அணி நிர்வாகம் எதுவும் ஆர்வம் காட்டவில்லை. சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை. இதன் காரணமாக ஐபிஎல்லில் கம் பேக் கொடுக்கும் இவரின் கனவும் காலியாகி உள்ளது.

 ஆட்டம்

ஆட்டம்

இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஸ்ரீசாந்த் மிகவும் அதிரடியாக பவுலிங் செய்து வருகிறார். கேரளா அணிக்காக ஆடி வரும் இவர் ஒடிசாவிற்கு எதிரான முதல் போட்டியில் 8 ஓவர் போட்டு இரண்டு விக்கெட் எடுத்தார். அந்த போட்டியில் கேரளாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

காரணம்

காரணம்

அதன்பின் இன்று உத்தர பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் 9.4 ஓவர் வீசி 65 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்துள்ளார். கிட்டதட்ட உத்தர பிரதேசத்தின் முக்கியமான விக்கெட்டுகள் அனைத்தையும் ஸ்ரீசாந்த்தான் எடுத்தார். இத்தனை வருடம் கழித்து களத்திற்கு வந்து இருந்தாலும் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்,

 இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீசாந்த் இருக்கிறார். இதன் காரணமாக தற்போது முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி தற்போது ஸ்ரீசாந்த் கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kerala player Sreesanth took a 5 wicket haul in the Vijay Hazare Trophy.
Story first published: Monday, February 22, 2021, 14:52 [IST]
Other articles published on Feb 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X