For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓடியாங்க… ஓடியாங்க… ஐபிஎல் டிக்கெட் ரூ.500 மட்டுமே.. ரசிகர்களுக்கு சலுகை அறிவித்த அந்த அணி

ஹைதராபாத்:ஐபிஎல் போட்டியில் 25 ஆயிரம் ரசிகர்களுக்கு 500 ரூபாய்க்கு டிக்கெட் வழங்க போவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது.

வரும் 23-ம் தேதி 12-வது ஐபிஎல் ஆட்டங்கள் தொடங்குகின்றன. அதில் 29-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன் ரைசர்ஸ் சந்திக்கிறது.

சொந்த மண்ணில் நடக்கும் முதல் ஆட்டம். அதற்காக பல புதுமையான ஐடியாக்களை அந்த அணி நிர்வாகம் செய்து வருகிறது.

எனக்கு ஏழு மொழிகளில் கெட்ட வார்த்தைகள் தெரியும்! அதிர வைத்த பிரபல கிரிக்கெட் அம்பயர்! எனக்கு ஏழு மொழிகளில் கெட்ட வார்த்தைகள் தெரியும்! அதிர வைத்த பிரபல கிரிக்கெட் அம்பயர்!

ரூ.500க்கு டிக்கெட்டுகள்

ரூ.500க்கு டிக்கெட்டுகள்

போட்டியை காண வரும் ரசிகர்களில் 25 ஆயிரம் பேருக்கு 500 ரூபாய்க்கு டிக்கெட் வழங்கப்படும் என்று சன் ரைசர்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை 13ம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனிலும், நேரடியாகவும் தொடங்குகிறது.

டுவிட்டர் பதிவு

இதைக் குறிப்பிட்டு சன் ரைசர்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் டேவிட் வார்னர் பேசுகிறேன், அனைத்து ஆரஞ்ச் ரசிகர்களுக்கும் சிறப்புச் செய்தியைச் சொல்கிறேன்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

இத்தனை ஆண்டுகளாக அன்பையும், ஆதரவையும் வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி. எங்களின் ரசிகர்களுக்கு நாங்கள் நன்றியை திருப்பி அளிக்கும் தருணம் இதுவாகும்.

முன்பதிவுக்கு முந்துங்கள்

முன்பதிவுக்கு முந்துங்கள்

25 ஆயிரம் ரசிகர்களுக்கு முதல் நாள் ஆட்டத்தைக் காண 500 ரூபாய்க்கு டிக்கெட் வழங்க சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 12, 2019, 16:06 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
SRH franchise has decided to keep the rate of 25,000 seats for their first home game at a low price of just Rs 500.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X