நல்லா தேறிட்டேன்... இன்னும் ஒரு வாரத்துல வர்றேன்... எல்லாமே இனிமே சிறப்புதான்!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் இரண்டு போட்டிகளில் எஸ்ஆர்எச் இதுவரை விளையாடி இரண்டிலும் தோல்வி கண்டுள்ளது.

Kane Williamson வரணும்! SRHன் Middle Orderஐ காப்பாத்தணும் | OneIndia Tamil

இதையடுத்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் தன்னுடைய காயத்திலிருந்து சிறப்பாக மீண்டுள்ளதாகவும் அடுத்த வாரத்தில் அணியில் இணையவுள்ளதாகவும் கேன் வில்லியசம்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா டெஸ்டில் நடந்த தவறு.. தேவையின்றி தனிமைப்படுத்த பட்ட ஸ்டார் ப்ளேயர்.. கோபத்தில் டெல்லி அணி!

எஸ்ஆர்எச் ஃபார்ம்

எஸ்ஆர்எச் ஃபார்ம்

ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை இரு போட்டிகளில் எஸ்ஆர்எச் விளையாடியுள்ளது. கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையிலான அந்த இரு போட்டிகளிலும் எஸ்ஆர்எச் முறையே 10 ரன்கள் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது.

முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தல்

முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தல்

கடந்த இரு போட்டிகளிலும் அணியின் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை. அவர் அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்றும் அப்போதுதான் மிடில் ஆர்டர் சிறப்பாக இருக்கும் என்றும் சஞ்ய் மஞ்ச்ரேகர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

பிட்னஸ் பிரச்சனைகள்

பிட்னஸ் பிரச்சனைகள்

இந்நிலையில் தன்னுடைய உடல்நலம் குறித்த அப்டேட்டை கேன் வில்லியம்சன் தற்போது தெரிவித்துள்ளார். பிட்னஸ் பிரச்சினைகள் காரணமாகவே கடந்த இரு போட்டிகளில் தான் பங்கேற்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஐதராபாத் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அவர் பேசியுள்ளார்.

வில்லியம்சன் நம்பிக்கை

வில்லியம்சன் நம்பிக்கை

தான் ஒரு வாரத்தில் தேறிவிடுவேன் என்றும் விரைவில் அணியில் இணையவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். பயிற்சிகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் ஆனால் விரைவில் பூரண குணமடைவேன் என்று முழு நம்பிக்கையுடன் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

வில்லியம்சன் இல்லாத அணி

வில்லியம்சன் இல்லாத அணி

கடந்த ஐபிஎல் போட்டிகளில் எஸ்ஆர்எச் அணியின் வெற்றிக்கு சிறப்பாக கைகொடுத்தவர் கேன் வில்லியம்சன். இந்த சீசனில் அவர் இதுவரை அணியில் இணையாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஒருவாரத்தில் தேறிவிடுவேன் என்று அவர் கூறினாலும் இன்னும் சிலபோட்டிகளில் வில்லியம்சன் இல்லாமல் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் உள்ளது

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pretty optimistic about being close to full fitness very soon -Kane Williamson
Story first published: Friday, April 16, 2021, 18:11 [IST]
Other articles published on Apr 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X