For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் பந்தில் டேவிட் வார்னர் அவுட்.. 11 ஆண்டு சாதனை முறியடிப்பு! அடுத்தடுத்து மிரட்டிய அறிமுக வீரர்!

Recommended Video

IPL 2019: Mumbai vs Hyderabad | அல்ஜாரியின் பந்து வீச்சால் மும்பை வெற்றி

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் தன் முதல் ஐபிஎல் போட்டியில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் வீரர் அல்சாரி ஜோசப் 11 ஆண்டு ஐபிஎல் சாதனையை முறியடித்து வாயைப் பிளக்க வைத்துள்ளார்.

அனுபவ வீரர் லசித் மலிங்கா இலங்கைக்கு திரும்பி உள்ள நிலையில், வேறு வழியில்லாமல் புதிய வீரரான வெஸ்ட் இண்டீஸின் அல்சாரி ஜோசப்பை ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2016 முதல் ஆடி வருகிறார்.

என்னப்பா.. இப்படி பால் போடுற? கடுப்பான தோனி.. நர்சரி குழந்தை போல பம்மிய தீபக் சாஹர்.. பதறிய அம்பயர்! என்னப்பா.. இப்படி பால் போடுற? கடுப்பான தோனி.. நர்சரி குழந்தை போல பம்மிய தீபக் சாஹர்.. பதறிய அம்பயர்!

மலிங்காவிற்கு மாற்று

மலிங்காவிற்கு மாற்று

முதலில் மலிங்காவிற்கு மாற்றாக அல்சாரி ஜோசப் ஆடுவார் என கூறப்பட்ட போது, யாரும் இவரை கண்டுகொள்ளவில்லை. மும்பை முதலில் பேட்டிங் செய்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணிக்கு 137 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஜோசப்பின் முதல் ஓவர்

ஜோசப்பின் முதல் ஓவர்

பும்ரா, ஜேசன் பெஹ்ரண்டாப், ஹர்திக் பண்டியா தான் மும்பை பந்துவீச்சில் முக்கிய பங்காற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தன் ஹைதராபாத் இன்னிங்க்ஸின் ஐந்தாவது ஓவரை வீசினார் ஜோசப். அது தான் ஐபிஎல் தொடரில் ஜோசப்பின் முதல் ஓவர்.

டேவிட் வார்னர் அவுட்

டேவிட் வார்னர் அவுட்

தன் முதல் ஓவரின் முதல் பந்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் அனுபவ வீரர் டேவிட் வார்னரை பௌல்டு அவுட் செய்து தன் மீதான எதிர்பார்ப்பை கிளறி விட்டார். தன் அடுத்து ஓவரில் விஜய் ஷங்கரை காலி செய்தார். ஹைதராபாத் அணி இதன் பின் தடுமாறத் துவங்கியது.

6 விக்கெட்கள்

6 விக்கெட்கள்

அல்சாரி ஜோசப் தொடர்ந்து ஹூடா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கௌல் விக்கெட்களை எடுத்து அசத்தினார். இந்தப் போட்டியில் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்கள் அள்ளினார் ஜோசப்.

11 ஆண்டு சாதனை

11 ஆண்டு சாதனை

இந்த பந்துவீச்சின் மூலம் 11 ஆண்டு கால ஐபிஎல்-இன் சிறந்த பந்துவீச்சு சாதனையை முறியடித்தார் ஜோசப். ஐபிஎல்-இன் துவக்க வருடமான 2008இல் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சோஹைல் தன்வீர் 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் எடுத்து இருந்ததே ஐபிஎல் சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

ஆச்சரிய சாதனை

ஆச்சரிய சாதனை

12 ரன்களில் 6 விக்கெட்கள் எடுத்த அல்சாரி ஜோசப் அந்த சாதனையை தன் அறிமுகப் போட்டியிலேயே முறியடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவரது அசத்தல் பந்துவீச்சால் வெறும் 136 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, April 7, 2019, 12:28 [IST]
Other articles published on Apr 7, 2019
English summary
SRH vs MI : Alzarri Joseph breaks 11 year old IPL record by Sohail Tanveer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X