For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர்... கேஎல்... அடுத்தடுத்த சாதனைகளுக்காக காத்துக்கிட்டு இருக்காங்க... வெற்றிக்காகவும்தான்!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் அடுத்தடுத்து நிகழவுள்ளன.

Recommended Video

Kane Williamson வரணும்! SRHன் Middle Orderஐ காப்பாத்தணும் | OneIndia Tamil

இன்றைய தினம் முதலில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் சென்னையில் மோதவுள்ளன.

டேவிட் வார்னர், கேஎல் ராகுல் என இருதரப்பு வீரர்கள் இன்றைய போட்டியில் தங்களது சிறப்பான சாதனைகளுக்காக காத்திருக்கும் நிலையில் போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்தடுத்த போட்டிகள்

அடுத்தடுத்த போட்டிகள்

ஐபிஎல் 2021 தொடரில் இன்றைய தினம் அடுத்தடுத்து இரு போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை சிதம்பரம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையில் முதல் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது.

இறுதி இடங்களில் அணிகள்

இறுதி இடங்களில் அணிகள்

ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் இந்த இரு அணிகளும் இறுதி இடங்களில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் பட்டியலில் இந்த அணிகள் முன்னேற்றத்தை காண முடியும். பஞ்சாப் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும், சன்ரைசர்ஸ் அணி மூன்றிலும் தோல்வியும் கண்டுள்ளது.

வார்னருக்கு ஒரு அரைசதம் பாக்கி

வார்னருக்கு ஒரு அரைசதம் பாக்கி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஐபிஎல்லில் 50 அரைசதங்கள் சாதனையை பூர்த்தி செய்ய இன்னும் ஒரு அரைசதமே மீதமுள்ளது. இதையடுத்து இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி இந்த சாதனையை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஷிகர் தவான் 42 அரைசதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

கேஎல் ராகுல் வெயிட்டிங்

கேஎல் ராகுல் வெயிட்டிங்

இதேபோல இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுலும் ஒரு சாதனைக்காக காத்திருக்கிறார். அவர் டி20 வடிவத்தில் அதிவேகமாக 5,000 ரன்களை எட்ட இன்னும் ஒரு ரன்னே மீதமுள்ளது. அதை இன்றைய போட்டியில் அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

சொதப்பும் மிடில் ஆர்டர்

சொதப்பும் மிடில் ஆர்டர்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தீவிரமாக விளையாடினாலும், அந்த அணியின் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட வீரர்கள் இன்றி அந்த அணி தவித்து வருகிறது. காயத்தால் அணியில் இணையாமல் உள்ள கேன் வில்லியம்சன் மீண்டும் விளையாடினால் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படலாம்.

Story first published: Wednesday, April 21, 2021, 15:00 [IST]
Other articles published on Apr 21, 2021
English summary
Sunrisers have started with three defeats in a row
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X