For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிஸ்டர் கோலி.. என்ன இதெல்லாம்.. இது ஐபிஎல் கிரிக்கெட்.. கிளப் கிரிக்கெட் மாதிரி ஆடுறீங்களே?

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரிலும் தன் மோசமான தோல்விகளை தொடர்ந்து கொண்டு இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

கடந்த இரண்டு சீசன்களாக மோசமாக ஆடி வந்த பெங்களூர், இந்த சீசனில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் படுமோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால், அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

விசில் போடு... !! ரொம்ப, ரொம்ப நல்ல விஷயம்.. தோனியை பாராட்டிய நம்ம சேவாக் விசில் போடு... !! ரொம்ப, ரொம்ப நல்ல விஷயம்.. தோனியை பாராட்டிய நம்ம சேவாக்

சென்னையிடம் தோல்வி

சென்னையிடம் தோல்வி

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மரண அடி வாங்கி ஐபிஎல் தொடரை துவக்கி வைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். வெறும் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது பெங்களூர்.

மீண்டும் தோல்வி

மீண்டும் தோல்வி

அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி 181 ரன்களை மட்டுமே எட்டியது. ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தும் அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. ஆறு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது.

கோலியின் கோபம்

கோலியின் கோபம்

அந்தப் போட்டியில் கடைசி பந்தை மும்பை அணி வீரர் மலிங்கா நோ பாலாக வீசினார். ஆனால், அதை அம்பயர் கண்டு கொள்ளாததால் கேப்டன் கோலி கடும் கோபம் கொண்டார். அப்போது அம்பயரை விமர்சித்த கோலி, "இது ஐபிஎல் கிரிக்கெட். கிளப் கிரிக்கெட் அல்ல" என கடுமையாக சாடினார்.

மீண்டும் மரண அடி

மீண்டும் மரண அடி

அப்படி பேசிய கோலியின் பெங்களூர் அணி அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் மீண்டும் மரண அடி வாங்கியது. இந்த முறை பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மோசமாக செயல்பட்டது பெங்களூர்.

கோலி, டி வில்லியர்ஸ் ஏமாற்றம்

கோலி, டி வில்லியர்ஸ் ஏமாற்றம்

ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்தது. பதிலுக்கு பெங்களூர் அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாபமாக 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் கோலி 3 ரன்னும், டி வில்லியர்ஸ் 1 ரன்னும் எடுத்து ஏமாற்றினர்.

கிளப் கிரிக்கெட் மாதிரி..

கிளப் கிரிக்கெட் மாதிரி..

இப்போது கோலி வசை பாடிய அம்பயர், கோலியை பார்த்து, "பெங்களூர் டீம்! இது ஐபிஎல் கிரிக்கெட்.. இப்படி கிளப் கிரிக்கெட் மாதிரி ஆடுறீங்களே" என கேள்வி கேட்டால் கோலி என்ன செய்வார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேப்டன்சி சரியில்லை

கேப்டன்சி சரியில்லை

இனி வரும் போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெறவில்லை என்றால் கோலியின் கேப்டன்சி அதற்கு காரணம் என அனைவரும் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது.

Story first published: Monday, April 1, 2019, 11:44 [IST]
Other articles published on Apr 1, 2019
English summary
SRH vs RCB : Kohli under strong criticism after humilitaing loss against Sunrisers Hyderabad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X