For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கை கிரிக்கெட் அணியை பலப்படுத்த திட்டமிட்டிருக்காங்க... கிரிக்கெட் இயக்குநராக டாம் மூடி நியமனம்!

கொழும்பு : இலங்கை கிரிக்கெட் அணியை மேலும் பலப்படுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டாம் மூடியை அணியின் கிரிக்கெட் இயக்குநராக நியமித்துள்ளது.

விராட் கோலியை கிட்டஇருந்து பார்த்து அவரோட தலைமை பண்பை கத்துக்கணும்.. மாக்ஸ்வெல் உற்சாகம்|! விராட் கோலியை கிட்டஇருந்து பார்த்து அவரோட தலைமை பண்பை கத்துக்கணும்.. மாக்ஸ்வெல் உற்சாகம்|!

அவர் இன்று முதல் தன்னுடைய பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக அணியின் கோச்சாக இரண்டு ஆண்டுகளுக்கு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

2007 உலக கோப்பை

2007 உலக கோப்பை

இலங்கை அணியின் முன்னாள் கோச்சாக செயல்பட்டவர் முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டாம் மூடி. இவரது தலைமையின்கீழ் கடந்த 2007ல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் இயக்குநர்

கிரிக்கெட் இயக்குநர்

டாம் மூடி இரண்டு ஆண்டுகள் இலங்கையின் கோச்சாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கோச்சாகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் இயக்குநர்

கிரிக்கெட் இயக்குநர்

இந்நிலையில் தற்போது இலங்கை அணியின் கிரிக்கெட் இயக்குநராக மூடி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அவர் தனது பொறுப்பை ஏற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கை அணியை மேலும் சிறப்பாகவும் வலிமையாகவும் ஆக்கும்வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

டாம் மூடி கிரிக்கெட் இயக்குநர்

டாம் மூடி கிரிக்கெட் இயக்குநர்

தங்களது தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த பரிந்துரைகளின் படி டாம் மூடி கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை அணி அடுத்தடுத்த தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 1, 2021, 11:44 [IST]
Other articles published on Mar 1, 2021
English summary
Tom Moody will start his tenure effective from March 1, 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X