அடிச்சிருவாரு போல.. மைதானத்தில் கடும் சண்டை.. கோபித்துக்கொண்டு சென்ற இலங்கை கோச்.. அணிக்குள் சலசலப்பு

கொழும்பு: இந்திய அணியின் பேட்டிங்கில் 9வது வீரரை கூட விக்கெட் எடுக்க முடியவில்லை என்பதில் இலங்கை கேப்டனும் - பயிற்சியாளரும் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் போது அவசர தூது விட்ட டிராவிட்.. வெற்றிக்கு காரணமான அந்த வார்த்தைகள்.. அப்படி கூறியது என்னபோட்டியின் போது அவசர தூது விட்ட டிராவிட்.. வெற்றிக்கு காரணமான அந்த வார்த்தைகள்.. அப்படி கூறியது என்ன

இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி வெற்றி பெற சாதகமான சூழல் நிலவிய நிலையில் தீபக் சாஹர் அதனை மாற்றி அமைத்தார்.

திணறல்

திணறல்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். ப்ரித்வி ஷா 13, ஷிகர் தவான் 29, இஷான் கிஷான் 1, மணிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து வெளியேறினர். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவும் 53 ரன்களை விளாசி அவுட்டானார்.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

இந்திய அணி 193 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி போது 9வது பேட்ஸ்மேனாக தீபக் சாஹர் களமிறங்கினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இலங்கை பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்ட அவர், 69 ரன்களை விளாசி இந்தியாவின் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணியின் டாப் வரிசையை சுலபமாக சரித்த இலங்கை பவுலர்கள், தீபக் சாஹரை மட்டும் எதுவுமே செய்ய முடியவில்லை.

வாக்குவாதம்

வாக்குவாதம்

ஒரு அணியின் பேட்டிங் வரிசையில் 9வது வீரரை கூட விக்கெட் எடுக்க முடியாதா என இலங்கை அணியின் பயிற்சியாளர் ஆர்தர் கோபமாக டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் கோபத்தில் திட்டிக்கொண்டிருந்தார். பின்னர் மைதானத்திற்கு வந்த ஆர்த்தர், இலங்கை கேப்டன் தசுன் சனகாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இனி உங்களை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது என்பது போல அவர் கோபத்துக்கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோசமான ஃபார்ம்

இலங்கை அணி சமீப காலமாக மிகவும் பரிதாப நிலைக்கு சென்றுள்ளது. தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தோல்வியை சந்தித்து வந்த இலங்கை, இந்தியாவின் இரண்டாம் தரம் என அனைவராலும் விமர்சிக்கப்பட்ட வீரர்களுடன் கூட தோல்வியை சந்தித்துள்ளனர். எனவே இவர்கள் இனி டி20 உலகக்கோப்பையில் தகுதிச்சுற்றில் கூட தேற மாட்டார்கள் என தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sri Lanka head coach Arthur and captain Shanaka involved in heated argument after losing the 2nd ODI to India, video goes viral
Story first published: Wednesday, July 21, 2021, 13:53 [IST]
Other articles published on Jul 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X