For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி வரை விரட்டி வந்த இங்கிலாந்து.. ஒரு பால் மிச்சம் வைத்து வீழ்த்திய இலங்கை...!

லண்டன்: இங்கிலாந்து அணியின் கடுமையான பேட்டிங் சவாலையும் தாண்டி ஒரே ஒரு பந்து மிச்சமிருந்த நிலையில் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்த, இலங்கை கிரிக்கெட் அணி 2வது டெஸ்ட் போட்டியில் வென்றது.

இந்த போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

மிக மிக டென்ஷனான போட்டியாக இது மாறி ரசிகர்களை மேலும் டென்ஷனாக்கி விட்டது.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 257 ரன்களையும், 2வது இன்னிங்ஸில் 457 ரன்களையும் எடுத்த்து. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 365 மற்றும் 2வது இன்னிங்ஸில் 249 ரன்களை சேர்த்தது.

மொயீன் சதம்

மொயீன் சதம்

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 108 ரன்களைக் குவித்தார்.

கடைசி 2 பந்து டென்ஷன்

கடைசி 2 பந்து டென்ஷன்

இங்கிலாந்து அணியின் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது கடைசி 2 பந்துகள் மட்டுமே மீதம் இருந்தன. அதை அவர்கள் சமாளித்து விட்டால் போட்டி டிராவாகி விடும். அதற்குள் அவர்களை ஆட்டமிழக்க வைத்து விட்டால் இலங்கைக்கு வெற்றி கிடைக்கும் என்ற நிலை.

எரங்கா போட்ட அபார பந்து

எரங்கா போட்ட அபார பந்து

இந்த நிலையில் வேகப் பந்து வீச்சாளர் சமிந்தா எரங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார். ஜிம்மி ஆண்டர்சனுக்கு அவர் போட்ட ஷார்ட் பால், பேட்டில் பட்டு, ரங்கனா ஹெராத்திடம் போய்ச் சேர்ந்த்து. இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது.

டிரா முயற்சி வீண்

டிரா முயற்சி வீண்

ஆண்டர்சனும், மொயீன் அலியும் சேர்ந்து 122 பந்துகளைச் சந்தித்து அணியை டிராவை நோக்கி கொண்டு சென்று கொண்டிருந்தபோது எரங்காவின் அபாரமான பந்து வீச்சால் அந்த முயற்சி சீர்குலைந்து போனது.

55 பந்து.. ரன்னே எடுக்காத ஆண்டர்சன்

55 பந்து.. ரன்னே எடுக்காத ஆண்டர்சன்

மொயீன் அலி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் போட்ட முதல் சதம் இதுதான். ஆண்டர்சன் 55 பந்துகளைச் சந்தித்தும் ரன் ஏதும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி 249 ரன்களில் சுருண்டு போனது.

சிறப்போ சிறப்பு

சிறப்போ சிறப்பு

இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பேட்டிங்கும் சரி, பந்து வீச்சும் சரி சிறப்பாகவே இருந்தது. அதேசமயம், போட்டியை தோல்வியிலிருந்து காக்க இங்கிலாந்தும் வெகு சிறப்பாக போராடியது ரசிகர்களைக் கவர்ந்தது.

Story first published: Wednesday, June 25, 2014, 12:03 [IST]
Other articles published on Jun 25, 2014
English summary
Sri Lanka won the second Test by 100 runs, and with it the series, shortly after seven o’clock in the evening. It was remarkably tense, given the apparently easy nature of the task at the start of play. There were just two balls of the match remaining when the paceman Shaminda Eranga, banged in a short ball to Jimmy Anderson, and the ball ballooned from his glove to Rangana Herath perched on the leg side. As the ball was caught, the Sri Lankan team engulfed the bowler, a writhing heap of humanity on the floor.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X