For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SL 2nd ODI: மீண்டும் அதே ஸீன்... இலங்கை பேட்டிங் - அணியில் முக்கிய மாற்றம்

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த ஜுலை.18ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்தியா - இலங்கை தொடரில் குழப்பம்.. விளையாட மறுத்து போர்க்கொடி தூக்கிய 5 வீரர்கள்.. காரணம் என்ன? இந்தியா - இலங்கை தொடரில் குழப்பம்.. விளையாட மறுத்து போர்க்கொடி தூக்கிய 5 வீரர்கள்.. காரணம் என்ன?

இதன் மூலம் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இன்று 2வது ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

 முதல் போட்டியை போலவே

முதல் போட்டியை போலவே

இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா, பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் ஒருநாள் போட்டி போலவே இதிலும், டாஸ் வென்று இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ஒரேயொரு மாற்றமாக இசுரு உடானா நீக்கப்பட்டு, கசுன் ரஜிதா சேர்க்கப்பட்டுள்ளார்.

 ப்ரித்வி ஷா ரெடி

ப்ரித்வி ஷா ரெடி

அதேசமயம், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதே பிளேயிங் லெவன் தான். முதல் போட்டியில் ப்ரித்வி ஷா ஹெல்மெட்டில் பந்து பலமாக தாக்கியதில் அவர் தடுமாறிப்போனார். இதனால், அவர் இப்போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் நீடித்த நிலையில், அணியில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

 உஷார் இந்தியா

உஷார் இந்தியா

ஒரேயொரு நெகட்டிவ் விஷயம் என்னவெனில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடைசி சில ஓவர்களில் ரன்களை வாரி வழியங்கியது தான். இலங்கை அணி கடைசி 5 ஓவர்களில் 50க்கும் மேல் ரன்களை குவித்தது. இந்த இடத்தில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்களான புவனேஷ் குமார், தீபக் சாஹர் கவனமுடன் இருக்க வேண்டும்.

Recommended Video

IND VS SL கடைசிநேரத்தில் Srilanka Team அதிரடி Comeback | Oneindia Tamil
 புதிய சாதனைக்கு வாய்ப்பு

புதிய சாதனைக்கு வாய்ப்பு

இன்று இந்திய அணி வெல்லும் பட்சத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என்று கைப்பற்றிவிடும். ஒருவேளை வெற்றிப் பெற்றால், அது இலங்கைக்கு எதிரான 93-வது ஒருநாள் போட்டி வெற்றியாக அமையும். உலகின் வேறு எந்த அணியும், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்வளவு வெற்றிகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 20, 2021, 16:59 [IST]
Other articles published on Jul 20, 2021
English summary
sri lanka won toss elected to bat first in 2nd odi - இந்தியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X