For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. இந்தியா - இலங்கை தொடர்.. வெளியான புது வீடியோ.. இனி பிரச்னையே இல்லை!

கொழும்பு: இந்தியா - இலங்கை தொடர் குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ஒன்று ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய ஏ அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி தொடர்களில் பங்கேற்கவுள்ளது.

கடந்த 13ம் தேதி தொடங்கவிருந்த இந்த தொடரானது கொரோனா காரணமாக ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, கடந்த 6ம் தேதி நாடு திரும்பியது. பின்னர் தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து திரும்பிய மொத்த அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

போட்டிகள் ஒத்திவைப்பு

போட்டிகள் ஒத்திவைப்பு

இந்தியாவுடனான தொடர் பாதிக்கப்படக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை ஏ அணி ஒன்றை உருவாக்கி பயிற்சி அளித்து வந்தது. மெயின் அணி வீரர்கள் குவாரண்டனை முடிக்க காலதாமதம் ஆனால் இலங்கை ஏ அணியை களமிறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், போட்டிகள் 4 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் வீரர்களுக்கு மேலும் கொரோனா பரவுமா? திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். கொரோனா அச்சுறுத்தலால் ஹோட்டல் அறைகளில் குவாரண்டைன் செய்யப்பட்டிருந்த வீரர்கள் அனைவரும் தற்போது பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். திறந்தவெளி மைதானத்தில் வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மட்டும் பிபிடி உடைகளை அணிந்துக்கொண்டவாறு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended Video

SLC Announces Revised Timings For IND Vs SL Odi T20 Series | Oneindia Tamil
பலவீனமான அணி

பலவீனமான அணி

முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அணியின் ஸ்குவாட் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது. அதுகுறித்த அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கை அணி மொத்தமாகவே பலவீனமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, July 14, 2021, 17:27 [IST]
Other articles published on Jul 14, 2021
English summary
Sri Lankan team Started practice ahead of One day match series against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X