For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே ஜெயிச்சா தான் உங்களுக்கு சம்பளமே… கிரிக்கெட் வாரியம் அதிரடி… ஷாக்கான வீரர்கள்

கொழும்பு: இனி ஜெயிச்சால் தான் சம்பளம் தருவோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

உலக கோப்பையில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்து அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு நாடு திரும்பியது. அதனால் இலங்கை அணி மீதான விமர்சனம் அதிகரித்தது.

இதையடுத்து, அணியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. அதன்படி வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு பின் இலங்கை தலைமை பயிற்சியாளர் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

கோச் மாற்றம்?

கோச் மாற்றம்?

இந் நிலையில், இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சண்டிக்க ஹத்துறுசிங்கவை மாற்றுமாறு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கேட்டு கொண்டார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை கூறியிருக்கிறார்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

அவர் மேலும் கூறியிருப்பதாவது: வங்கதேச தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியை குலசேகர பெயரில் நடத்துமாறு கிரிக்கெட்டை வாரியத்தை கேட்டு கொண்டு உள்ளேன். இது குறித்து பலருடன் ஆலோசனை செய்திருக்கிறேன்.

வரைவு தாக்கல்

வரைவு தாக்கல்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மகேல ஜெயவர்தனே மற்றும் குமார் சங்கக்காரா உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஆலோசனைகளை கூறி இருக்கின்றனர். அவர்களின் யோசனைகளுடன் தயாரிக்கப்பட்ட கிரிக்கெட் வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தேன் என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் கருத்து

ரசிகர்கள் கருத்து

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன் நட்சத்திர வீரர், யார்க்கர் மன்னன் மலிங்கா ஓய்வு பெறுகிறார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளார் குலசேகரா இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தருணத்தில் வென்றால் தான் சம்பளம் என்பது வீரர்களுக்கு மேலும் பல நெருக்கடிகளை அளிக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, July 26, 2019, 10:21 [IST]
Other articles published on Jul 26, 2019
English summary
Srilanka cricket board ready to take hard decisions about players salary.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X