For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையே ஒரு துணிச்சல் முடிவு..! இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாராட்டு..!!

கொழும்பு: பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே, 10 ஆண்டுகள் கழித்து, இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.

இலங்கை அணியானது, 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. லாகூர் மைதானத்திற்கு இலங்கை வீரர்கள் பேருந்தில் சென்ற போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதில் 8 பேர் உயிரிழந்தனர். இலங்கை வீரர்கள் காயத்தோடு அதிர்டஷ்வசமாக உயிர்தப்பினர்.

அதிர்ச்சியில் மீளாத இலங்கை கிரிக்கெட் வாரியம், அத்துடன் தொடரை ரத்து செய்ய, இலங்கை வீரர்கள் சொந்த நாடு திரும்பினர். அதில் இருந்து முக்கியமான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கதை ஓடிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த அணியும் அந்நாட்டில் விளையாட முன்வரவில்லை.

சொந்த மண்ணில் போட்டிகள்

சொந்த மண்ணில் போட்டிகள்

இந்த வருடம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8 போட்டிகள் அந்நாட்டு மண்ணில் நடத்தப்பட்டது. அதனை மையப்படுத்தி பாகிஸ்தான் மண்ணில் பாதுகாப்பான வகையில் கிரிக்கெட் விளையாடலாம் என்று பிரகடனம் செய்தது. அதன் பிறகு உலக நாடுகள் ஓரளவு நிலைமையை உணரத் தொடங்கி உள்ளன.

பாக். விருப்பம்

பாக். விருப்பம்

இந்நிலையில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அக்டோபர் மாதம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. பாகிஸ்தான் நடத்தும் இந்தத் தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற வேண்டும் என விரும்புகிறது. இந்த இரண்டு போட்டிகளும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கீழ் வருகிறது.

முக்கிய பேச்சுவார்த்தை

முக்கிய பேச்சுவார்த்தை

அண்மையில் லண்டனில் ஐசிசி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் இது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் அதிகாரிகளை பாகிஸ்தான் அனுப்பி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய இலங்கை கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது.

செப். அக். போட்டிகள்

செப். அக். போட்டிகள்

அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ள இலங்கை அணி, செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 9 வரை போட்டிகளில் பங்கு பெற உள்ளது. எனினும், அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 2 அணிகளுக்கும் இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

50 ஓவர் போட்டி

50 ஓவர் போட்டி

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, செப்டம்பர் 27ம் தேதி கராச்சியில் நடக்கிறது. 2 ஒருநாள் போட்டி 29ம் தேதியிலும், 3வது போட்டி அக். 2ம் திகதி தேதியும் நடக்கிறது. முதலாவது டி 20 போட்டி அக்டோபர் 5ம் தேதியும், 2வது மற்றும் 3வது போட்டிகள் முறையே 7 மற்றும் 9ம் தேதிகளில் லாகூரில் நடைபெற உள்ளது. இலங்கை அணி, தற்போது நியூஸிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது.

Story first published: Saturday, August 24, 2019, 15:37 [IST]
Other articles published on Aug 24, 2019
English summary
Srilanka cricket team set to play in pakistan soil after 10 years.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X