For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தா பிடி..!! வாங்கியதை அப்படியே திருப்பிக் கொடுத்த நியூசி…! காலே டெஸ்டில் திணறும் இலங்கை…!!

காலே: நியூசி.க்கு எதிரான டெஸ்டில் 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை முதல் இன்னிங்சில் 22 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து, 2 டெஸ்ட், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 22ம் தேதி கொழும்புவில் நடக்கிறது.

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது.

 ஆஷஸ் தொடரில் வெள்ளைக்கு பதிலாக சிவப்பு...! இது என்ன புதுசா இருக்கே..? அசத்தல் காரணம் ஆஷஸ் தொடரில் வெள்ளைக்கு பதிலாக சிவப்பு...! இது என்ன புதுசா இருக்கே..? அசத்தல் காரணம்

மோசமான வானிலை

மோசமான வானிலை

அப்போது, மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மைதானம் முழுவதும் மூடப்பட்டது. வானிலை நிலவரம் தொடர்ந்து அதே நிலையில் நீடித்ததால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

டெய்லர் 86

டெய்லர் 86

டெய்லர் 86 ரன்கள், சாண்ட்னர் 8 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். 2வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த டெய்லர் நிலைக்கவில்லை. 86 ரன்களில் வெளியேறினார்.

249 ரன்களில் சுருண்டது

249 ரன்களில் சுருண்டது

அவர் தொடர்ந்து வைத்து விக்கெட் வீழ்ச்சி நிற்கவில்லை. சாண்டனர் 13 ரன்களிலும், சவுத்தி 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். போல்டு 18, அஜாஸ் படேல் டக் அவுட்டாகி வெளியேறினர். நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு சுருண்டது.

சொதப்பல் துவக்கம்

சொதப்பல் துவக்கம்

தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கைக்கு, கருணரத்னே 39 ரன்கள் எடுத்தும், திரிமன்னே 10 ரன்கள் எடுத்தும் சுமாரான துவக்கம் அளித்தனர். பின் வந்த மெண்டிஸ் 53 ரன்களும், மாத்யூஸ் 50 ரன்கள் எடுத்தனர்.

பின்தங்கிய நிலை

பின்தங்கிய நிலை

தொடர்ந்து வந்த குசல் பெரேரா, தனஞ்சயா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து 22 ரன்கள் பின் தங்கி இருக்கிறது.

Story first published: Friday, August 16, 2019, 9:42 [IST]
Other articles published on Aug 16, 2019
English summary
Srilanka trail by 22 runs against Newzealand in Galle test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X