For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூன்றே நாட்களில் தென் ஆப்பிரிக்காவை புரட்டிப் போட்ட இலங்கை!

காலே: காலேவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் போட்டியில் 3 நாட்களிலேயே தென் ஆப்பிரிக்காவைப் புரட்டிப் போட்டு வீழ்த்தியது இலங்கை.

srilanka vs sa


இப்போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்ற சந்திமால் அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சுரங்கா லக்மால் இலங்கை அணியை வழிநடத்தினார்.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் துவக்க வீரர் கருணாரத்னே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் குவித்தார். இது அவரது 50ஆவது டெஸ்ட போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ரபாடா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களைப் பெற்றாலும் கூட பந்து வீச்சின் மூலம் தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்தியது இலங்கை. முதல் இன்னிங்ஸ்யை விளையாடிய தென்னாபிரிக்கா அணி 126 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் அதிகபட்சமாக 49 ரன்களை குவித்தார். இலங்கை அணி தரப்பில் பெரேரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 161 ரன்கள் முன்னிலை பெற்றது.
srilanka vs sa


இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணி 190 ரன்களை குவித்து அட்டமிழந்தது. அந்த அணியின் கருணாரத்னே சிறப்பாக விளையாடி 60 ரன்களை குவித்தார். தென்னாபிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்களையும் ரபாடா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் தென்னாபிரிக்கா அணிக்கு 351 ரன்கள் வெற்றிக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை துரத்திய தென்னாபிரிக்கா இலங்கை சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாபிரிக்கா அணி கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பிய பின்னர் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவேயாகும். இலங்கை தரப்பில் பெரேரா 6 விக்கெட்களை வீழ்த்தினார். தென்னாபிரிக்கா அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் நாயகனாக கருணாரத்னே தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இப்போட்டியின் சிறப்புகள்:

போட்டியின் முதல் நாளில் 11 விக்கெட்களும், இரண்டாவது நாளில் 13 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டது. மூன்றாவது நாளில் 16 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது.

இப்போட்டியில் தென்னாபிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அதிக விக்கெட்கள் வீழ்த்திய தென்னாபிரிக்கா பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பொல்லாக் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இப்போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் தென்னாபிரிக்கா அடித்த ரன்கள் (126&70),இலங்கை அணியின் தொடக்க வீரர் கருணாரத்னே அடித்த ரன்களை (158&60) விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.





Story first published: Sunday, July 15, 2018, 16:39 [IST]
Other articles published on Jul 15, 2018
English summary
Srilanka have beaten SA in 3 days in the Galle test match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X