For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கைப்புள்ள டூ கடைக்குட்டி சிங்கம்.. இலங்கை கிரிக்கெட் அணி மீண்ட கதை.!

சென்னை; ஒரு காலத்தில் இலங்கை அணியை கண்டால், மற்ற அணிகள் நடுங்கும். அந்த அளவுக்கு ஜாம்பவான்கள் அடங்கிய அணி

முரளிதரன், சங்கக்காரா, ஜெயவர்த்தனே, தில்சான், மலிங்கா ஆகியோர் விலகிய நிலையில், இலங்கை அணியில் நிலை தலை கீழ் ஆனது..

இந்தியா எப்போது எல்லாம் ஃபார்ம் அவுட் ஆகிறதோ, அப்போது எல்லாம் இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடி, ஃபார்ம்க்கு திரும்பும்.

பரிதாபம்

பரிதாபம்

ஒரு கட்டத்தில் இலங்கை அணி கடந்த 2 ஆண்டுகளாக ஜிம்பாப்வே, வங்கதேசத்தை தவிர்த்து எந்த பெரிய அணிகளுடனும் வெற்றி பெறவில்லை. டி-20 உலகக் கோப்பை தொடரில் கத்துக்குட்டி அணியுடன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவமானம்

அவமானம்

இது போதாது என்று இந்திய அணி, இலங்கை சுற்றுப் பயணத்திற்கு சீனியர் வீரர்களை அனுப்பாமல், ஜூனியர் வீரர்களை அனுப்பியது. இது இலங்கையை கடுமையாக கோபமடைய செய்தது. இந்தியா எங்களை அவமானப்படுத்திவிட்டதாக ரனதுங்கா வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். ஆனால், அப்படி இரண்டாம் தர வீரர்கள் அடங்கிய அணியுடன் கூட இலங்கை அணி தோல்வியை தழுவியது

தவறு

தவறு

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஒரு போட்டியில் கூட இலங்கை வெற்றி பெறவில்லை. இலங்கையில் பல திறமையான வீரர்கள் இருந்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தராமல், 2 போட்டிகளிலேயே அணியை விட்டு தூக்கும் தவறான பார்முலாவை இலங்கை பயன்படுத்தியது.

பிளான்

பிளான்

மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களும், வீரர்களுக்கான ஊதிய பிரச்சினை என்று அகல பாதளத்திற்கு சென்றது. அப்போது தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் முடிவு எடுத்தார். டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி அபாரமாக செயல்பட்டு இழந்த பெருமையை மீட்க வேண்டும் என்பதே பிளான்.

உள்ளூர் போட்டி

உள்ளூர் போட்டி

உலகக் கோப்பை தொடருக்கு முன் இலங்கை கிரிக்கெட் வாரியம் உள்ளூர் டி-20 தொடரை நடத்தியது. இதில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடையாளம் காணப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். இலங்கை இழந்த பெருமையை மீட்டு எடுப்பதே உங்கள் பணி என்று அவர்களின் கடமையை இலங்கை கிரிக்கெட் வாரியம் உணர்த்தியது. எவ்வளவு தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்தது. விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் வெளியே சென்றுவிடலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திறமை

திறமை

மிக்கி ஆர்தர் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் நிர்வாகிகள் ஜெயவர்த்தனே போன்ற விரர்களின் உதவியால் இலங்கை அணி வீரர்கள் புதிய உத்வேகம் பெற்றனர். ஹசரங்கா, அசலங்கா, போன்ற வீரர்கள் இலங்கையில் கொட்டி கிடக்கும் திறமையை உலக நாடுகளுக்கு வெளிகாட்டினர். இலங்கை அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை என்றாலும் ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினர். இதன் மூலம் இலங்கை அணி 2-0 என்ற டெஸ்ட் தொடரை வென்றது. இந்த நிலையில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இலங்கை அணி தற்போது மீண்டு வருகிறது. சங்கக்காரா, ஜெயவர்த்தனே போன்ற வீரர்கள் பயிற்சியாளராக செயல்பட்டால், அது இலங்கைக்கு நிச்சயம் நன்மையை தரும்.

Story first published: Friday, December 3, 2021, 21:40 [IST]
Other articles published on Dec 3, 2021
English summary
Srilanka Won the series vs WI, After the Worst two Years Srilanka turns the table and taste the success.. Micky Arthur Laid the Road to success
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X