For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்க ஊர்லயே வைச்சு உங்களை முடிக்கிறோம்.. இந்தியாவை சீண்டிய பாக். அமைச்சர்.. மூக்கை உடைத்த இலங்கை!

Recommended Video

Harin Fernando explains reason behind players not to play in Pakistan

கொழும்பு : முக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்ததற்கு உண்மையான காரணம் என்ன என்பதைக் கூறி இருக்கிறார் இலங்கை அமைச்சர் ஹரின் பெர்னாண்டஸ்.

முன்னதாக பாகிஸ்தான் அமைச்சர் பாவாத் ஹுசைன் சௌதரி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் வராமல் இந்தியா தடுக்கிறது என அபாண்டமான குற்றச்சாட்டை வைத்து இருந்தார். அது உண்மை இல்லை என்றும் மறுத்து இருக்கிறார் இலங்கை அமைச்சர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

பாகிஸ்தான் நாட்டில் வரும் செப்டம்பர் 27 முதல் நடைபெற உள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் தொடரில் இலங்கை அணி பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது.

மரண பீதி

மரண பீதி

அதில் இலங்கை வீரர்கள் லேசான காயம் அடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. அந்த சம்பவம் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் மரண பீதியை உண்டாக்கியது. அதன் பின் எந்த அணியின் பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது.

பாகிஸ்தான் தீட்டிய திட்டம்

பாகிஸ்தான் தீட்டிய திட்டம்

அந்த நிலையை மாற்ற கடைசி ஆயுதமாக பாகிஸ்தான் தீட்டிய திட்டம் தான் இலங்கை அணியை தங்கள் நாட்டில் மீண்டும் கிரிக்கெட் ஆட வைப்பது. எந்த இலங்கை அணி தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டதோ, அதே அணி மீண்டும் தங்கள் நாட்டில் கிரிக்கெட் ஆடினால், மற்ற அணிகளும் மனம் மாறலாம் என்ற திட்டமாக இது இருக்கலாம் என கருதப்பட்டது.

முக்கிய வீரர்கள் மறுப்பு

முக்கிய வீரர்கள் மறுப்பு

இருநாட்டு கிரிக்கெட் போர்டுகள் இந்த தொடருக்கு ஒப்புக் கொண்டாலும், முக்கிய இலங்கை வீரர்கள் தங்களால் பாகிஸ்தான் செல்ல முடியாது என மறுத்து உள்ளனர். அது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

பாகிஸ்தான் அமைச்சர் சீண்டல்

பாகிஸ்தான் அமைச்சர் சீண்டல்

இந்த நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் பாவாத் ஹுசைன் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுக்காவிட்டால் ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என இந்தியா மிரட்டியதாக சில கிரிக்கெட் விமர்சகர்கள் தனக்கு கூறியதாக குற்றம் சுமத்தி இருந்தார்.

இந்தியாவை சீண்டினார்

இந்தியாவை சீண்டினார்

மேலும், இது இந்திய விளையாட்டு அமைப்புகளின் தரக்குறைவான காரியம் என்று சாடி இருந்தார். அவரது பேச்சுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற நிலையில், இந்தியாவை சீண்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் இப்படி கூறி இருக்கலாம் என கருதப்பட்டது.

இலங்கை அமைச்சர் பதிலடி

இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டஸ் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் ஆடாமல் இருக்க இந்தியா தூண்டியது எனக் கூறப்படும் செய்திகளில் உண்மை இல்லை என்றார்.

2009 சம்பவம் தான் காரணம்

2009 சம்பவம் தான் காரணம்

மேலும், சிலர் பாகிஸ்தான் நாட்டில் விளையாட வேண்டாம் என முடிவு எடுத்ததற்கு முக்கிய காரணம், 2009 சம்பவம் தான். அவர்கள் முடிவுக்கு மதிப்பு அளித்து, சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பிய வீரர்களை மட்டும் நாங்கள் தேர்வு செய்தோம் என்றார்.

உங்க ஊர்ல வைச்சு..

உங்க ஊர்ல வைச்சு..

எங்கள் அணி முழு பலத்துடன் உள்ளது. நாங்கள் பாகிஸ்தானை, பாகிஸ்தானிலேயே தோற்கடிப்போம் என அதிரடியான பதிலடியை கொடுத்தார் ஹரின் பெர்னாண்டஸ். அதாவது, மொக்கை டீமை வைச்சு உங்க ஊர்லயே, உங்களை முடிக்கிறோம் என பாகிஸ்தான் அமைச்சர் மூக்கை உடைத்துள்ளார் ஹரின்.

Story first published: Wednesday, September 11, 2019, 19:37 [IST]
Other articles published on Sep 11, 2019
English summary
Srilankan Minister Harin Fernando explains reason behind players not to play in Pakistan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X