For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவருக்கு இப்போ வயசு 25..! ஆனா 39 வருஷ கபில் ரெக்கார்டை உடைச்சு, காலி பண்ணிட்டாரே..!! மிரண்ட ஐசிசி

Recommended Video

Darren bravo stunning wicket by jasprit bumrah

மும்பை: அபார பவுலிங்கால் ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தர வரிசையில் 39 ஆண்டுகளுக்கு பிறகு 835 புள்ளிகளை கடந்த இந்திய பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இந்திய அணிக்கு பும்ரா வந்தார். பவுலிங்கில் மிகச்சிறந்த அணியாக மாறி இருக்கிறது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அசத்துகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி ஆகியோர் கலக்குகின்றனர்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால்... பும்ரா தான் பவுலிங் ஸ்டார். அந்த ஒருவரை சுற்றித்தான் அணியின் ஒட்டுமொத்த பவுலிங்கே சுழல்கிறது. அவரது வித்தியாசமான, நேர்த்தியான பவுலிங்கால், எதிரணி பேட்ஸ் மேன்கள் திணறி வருகின்றனர்.

ஜடேஜாவை வைத்து அஸ்வின் முகத்தில் கரியை பூசிய கோலி...!! காரணம் இது தான்..!!ஜடேஜாவை வைத்து அஸ்வின் முகத்தில் கரியை பூசிய கோலி...!! காரணம் இது தான்..!!

5 விக். அசத்தல்

5 விக். அசத்தல்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் தான் அவருக்கு கிடைத்தது. 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீசை 100 ரன்களில் சுருட்ட காரணமாக இருந்தார்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

2வது போட்டியின் முதல் இன்னிங்சில் ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். புதிய சாதனையையும் படைத்து அசத்தினார். அபார பவுலிங்கால் ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தர வரிசையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார்.

835 புள்ளிகள், 3ம் இடம்

835 புள்ளிகள், 3ம் இடம்

கம்மின்ஸ், ரபாடா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்துள்ளார் பும்ரா. அதாவது, 835 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு 835 புள்ளிகளை கடந்த இந்திய பாஸ்ட் பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

39 ஆண்டுகால சாதனை

39 ஆண்டுகால சாதனை

முன்னதாக, 1980ம் ஆண்டில் கபில்தேவ் 877 டெஸ்ட் புள்ளிகளை பெற்றார். அதன் பின்னர் 39 ஆண்டுகளாக எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரும் 835 புள்ளிகளை பெற்றதில்லை. இப்போது, பும்ரா தான் 835 என்ற நம்பரை எட்டியுள்ளார். பந்து வீச்சில் தனி முத்திரையை பதிக்கும் அவர், கபில் தேவ் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, September 4, 2019, 10:14 [IST]
Other articles published on Sep 4, 2019
English summary
Star bowler bumrah got third spot with 835 points after 39 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X