For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சியர் லீடர்" பிரியர்களே.. உங்களுக்கு ஒரு "பேட்" நியூஸ்.. ஸ்டார் டிவி சொல்வதைப் பாருங்க!

மும்பை: சீரியஸான கிரிக்கெட்டாக நாங்கள் ஐபிஎல்லை மக்களுக்குக் காட்டப் போகிறோம் என்று ஸ்டார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. சியர் லீடர்கள், ஆட்டம், பாட்டம் எல்லாம் ஸ்டார் டிவி ஒளிபரப்புகளில் இடம் பெறாது என்றும் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை இந்தப் போட்டிகளை ஒளிபரப்பி வந்த சோனி டிவி, மைதானங்களில் ஆடும் சியர் லீடர்களுக்குப் போட்டியாக ஸ்டூடியோவுக்குள்ளும் சியர் லீடர்களை வைத்து டான்ஸ் போட்டும், தீம் பாட்டு போட்டும் அதகளப்படுத்தியது நம்மில் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் இதற்கு முற்றிலும் நேர் மாறாக இருக்கப் போவதாக ஸ்டார் கூறியுள்ளது. ஆட்டம் பாட்டம் இல்லாத சீரியஸ் கிரிக்கெட்டை ரசிகர்களுக்குத் தரப் போவதாக அது கூறுகிறது.

ஒளிபரப்பு ரைட்ஸ்

ஒளிபரப்பு ரைட்ஸ்

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உலகளாவிய உரிமையை ஸ்டார் இந்தியா பெற்றுள்ளது. ஸ்டார் டிவி சானல்களில் ஐபிஎல் போட்டிகளை இது ஒளிபரப்பும். இந்த நிலையில் தங்களது ஸ்டைல் எப்படி இருக்கும் என்பதை ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் உதய் சங்கர் கூறியுள்ளார்.

சீரியஸாக இருப்போம்

சீரியஸாக இருப்போம்

ஐபிஎல் போட்டிகளை உலகத் தரத்துக்கு வழங்குவோம். சீரியஸான கிரிக்கெட்டை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கும். கிரிக்கெட் போட்டிக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம் என்றார் உதய்சங்கர்.

மாஸ் மசாலா இருக்காது

மாஸ் மசாலா இருக்காது

கடந்த 10 வருடமாக ஐபிஎல் போட்டி என்றாலே ஆட்டம், பாட்டம், கவர்ச்சி, சியர் லீடர்ஸ் என்றுதான் மக்கள் பார்த்து வந்துள்ளனர். மாஸ் மசாலா படம் போலத்தான் இத்தனை காலமாக சோனி டிவியில் ஓடி வந்தது ஐபிஎல். அதை நேர் மாறாக மாற்றப் போகிறதாம் ஸ்டார் டிவி.

சீரியஸ் குரூப்

சீரியஸ் குரூப்

உண்மையில் ஸ்டார் டிவியில் கிரிக்கெட் போட்டிகள் பார்த்தவர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை அது எப்படி வழங்கும் என்பதை ஊகிக்க முடியும். எந்தவிதமான மசாலாவும் இல்லாமல் இயல்பாக, கிரிக்கெட்டை மட்டுமே வழங்குவது ஸ்டார் டிவியின் ஸ்டைல். அதைத்தான் இப்போது ஐபிஎல் போட்டிகளிலும் வழங்கப் போகிறதாம் ஸ்டார் இந்தியா.

செம காசு

செம காசு

16,347 கோடி ரூபாய்க்கு உரிமையை ஏலத்தில் எடுத்துள்ளது ஸ்டார் இந்தியா. எனவே தனது ஒளிபரப்பையும் அது உலகத் தரத்தில் வழங்கப் போகிறது. அதற்கான திட்டங்களிலும் அது இறங்கி விட்டது. தனது ஸ்டைலை மாற்றாமல் அதேசமயம், ரசிகர்களுக்கு சரியான கிரிக்கெட் விருந்தளிக்கும் வகையிலும் போட்டி ஒளிபரப்பு இருக்குமாம்.

எல்லாம் ஓகே பாஸ்.. சித்து வந்து கத்து கத்துன்னு கத்தாம இருந்தா எங்களுக்குப் போதும்!

Story first published: Tuesday, September 5, 2017, 11:06 [IST]
Other articles published on Sep 5, 2017
English summary
Star India has said that Star Sports channel will give serious Cricket during the IPL telecast, its India boss Uday Shankar said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X