For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தடை முடிஞ்சாச்சு.. டீமுக்குள்ள விட்ருவோமா...? வார்னர், ஸ்மித்துக்கு வார்னிங் தரும் ஆஸி. வீரர்கள்

கேன்பரா : பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடைக்காலம் முடிந்தது.

தென்ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் 2018ம் ஆண்டு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தி விதியை மீறி ஆட்டத்தின் போக்கையே மாற்ற முயற்சித்தது, தொலைக் காட்சியில் தெளிவாக தெரிந்தது.

இந்த விவகாரத்தில் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைக்கேப்டன் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அவர்களைத் தவிர, மற்றொரு வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. அவரின் தடைக்காலம், கடந்த டிசம்பர் 29ம் தேதியுடன் முடிந்தது.

அஸ்வின்... ரொம்ப... ரொம்ப தப்பு பண்ணீட்டிங்க... ரொம்ப லேட்டஸ்டா விமர்சித்த போல்ட் அஸ்வின்... ரொம்ப... ரொம்ப தப்பு பண்ணீட்டிங்க... ரொம்ப லேட்டஸ்டா விமர்சித்த போல்ட்

முடிந்தது தடை

முடிந்தது தடை

அதனை தொடர்ந்து, அவர் ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரின் தடைக்காலம் ஓராண்டு இன்றுடன் முடிந்தது.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

இருவரும் தற்போது, ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித்தும் விளையாடுகின்றனர்.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

ஸ்மித், வார்னர் இல்லாதபோது, ஆஸ்திரேலியா பல மோசமான தோல்விகளை சந்தித்தது. அவர்களின் தடைக்காலம் முடிந்ததை அடுத்து, வரும் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருவரும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்கள் எதிர்ப்பு

வீரர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய மூத்த வீரர்கள் சிலர் வார்னர், ஸ்மித் இருவரும் அணிக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மிச்செல் ஸ்டார்க்,ஹாசல்வுட், பாட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரணகர்த்தா

காரணகர்த்தா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு அவப்பெயர் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் வார்னர் தான் என்பதால், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று 4 வீரர்களும் வலியுறுத்தியதாக தெரிகிறது.

புறக்கணிக்க திட்டம்

புறக்கணிக்க திட்டம்

மேலும், பந்தை சேதப்படுத்திய சம்பவத்தின் போது, வார்னரை அணியில் இருந்து நீக்க வேண்டும், இல்லாவிட்டால், தென் ஆப்ரிக்கா டெஸ்ட் போட்டியை புறக்கணிப்போம் என்று 4 பந்துவீச்சாளர்களும் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தாதகவும் கூறப்படுகிறது.

Story first published: Friday, March 29, 2019, 16:34 [IST]
Other articles published on Mar 29, 2019
English summary
Steve Smith and David Warner's ball-tampering bans have ended.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X