அம்பயருடன் சூடான வாக்குவாதம் -கோபத்துடன் வெளியேறிய ஸ்டீவ் ஸ்மித்

மெல்போர்ன் : அம்பயர் தவறான முடிவை எடுத்ததாக கூறி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மெல்போர்ன் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் தொடரில் அந்த அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மெல்போர்னில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 77 ரன்களை அடித்து முன்னாள் வீரர் கிரேக் சாப்பலின் சாதனையை முறியடித்தார்.

 ஆஸ்திரேலியா -நியூசிலாந்து அணிகள் மோதல்

ஆஸ்திரேலியா -நியூசிலாந்து அணிகள் மோதல்

ஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா பிரமாண்ட வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

மெல்போர்னில் இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்த நிலையில், ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

முதல்நாள் ஆட்டத்தில் 257 ரன்கள் குவிப்பு

முதல்நாள் ஆட்டத்தில் 257 ரன்கள் குவிப்பு

இந்த போட்டியில் பர்ன்ஸ் டக் அவுட் ஆக, வார்னர் 41 ரன்களுக்கு அவுட்டானார். லபுனேஸ் மற்றும் வேட் முறையே 63 மற்றும் 38 ரன்களில் அவுட்டாக, ஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்ட முடிவில் 257 ரன்களை எடுத்திருந்தது.

அதிக ரன் அடித்த ஆஸ்திரேலிய வீரர்

அதிக ரன் அடித்த ஆஸ்திரேலிய வீரர்

இந்தப் போட்டியில் இரண்டாவது நாளில் 77 ரன்களை அடித்து அவுட்டாகாமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித், அதிக ரன்களை எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் கிரேக் சாப்பலின் 7110 ரன்களை எட்டி அவரை பின்னுக்கு தள்ளினார்.

அம்பயருடன் ஸ்மித் வாக்குவாதம்

இந்நிலையில் ஆட்டத்தின்போது தவறான முடிவு எடுத்ததாக அம்பயர் நிகல் லலாங்குடன் ஸ்டீவ் ஸ்மித் ஆத்திரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது கோபத்தை வெளிப்படுத்தும்வகையில் ஸ்மித் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

"ஆத்திரமடைய உரிமை உண்டு"

இந்நிலையில் அம்பயரின் தவறான முடிவையடுத்து ஸ்டீவ் ஸ்மித் ஆத்திரமடைய அவருக்கு அனைத்து உரிமையும் உண்டு என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னர் ஷேன் வார்ன் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Steve Smith Fumes with Umpire Nigel Llong after a Controversial Call
Story first published: Thursday, December 26, 2019, 20:22 [IST]
Other articles published on Dec 26, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X