For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WATCH: 150 கிமீ வேகத்தில் பறந்த பந்து..! அப்படியே குப்புற விழுந்து மயங்கிய பிரபல வீரர்..!

லார்ட்ஸ்: ஆஷஸ் டெஸ்டில், ஆர்ச்சர் பவுலிங்கால், ஆஸி. வீரர் ஸ்மித் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

ஆஷஸ் 2வது டெஸ்ட் 4ம் நாள் ஆட்டம் லார்ட்சில் தொடர்ந்தது. இங்கிலாந்துக்கு சவால் விடுத்து வரும் ஸ்டீவ் ஸ்மித்தும், இளம் வேகப்புயல் ஜோப்ரா ஆர்ச்சரும் அபாரமான ஒரு சவால் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடைசியில் ஸ்மித் அடி வாங்கி காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்மித் 80 ரன்களில் ரிட்டையர்ட் ஆகி வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர், 203/6 விக்கெட்டுகள் என்று இருந்தது.

சமாளித்த ஸ்மித்

சமாளித்த ஸ்மித்

உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆர்ச்சர் பவுலிங்கை லாவகமாக எதிர் கொண்டார் ஸ்மித். விக்கெட்டை இழக்காமல் பலமுறை சமாளித்தார். குறிப்பாக ஆர்ச்சர் பந்துகள் அவரை மிரள வைத்தன. ஒரு கட்டத்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளாக அள்ளித் தெளித்தார் ஆர்ச்சர்.

பதம் பார்க்கப்பட்ட கை

பதம் பார்க்கப்பட்ட கை

அதில் ஒரு பந்து ஸ்மித்தின் முழங்கையை பதம் பார்த்தது. மைதானத்துக்கு மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்து பிளாஸ்திரியுடன் ஸ்மித் மீண்டும் ஆடத் தொடங்கினார். ஆனாலும் அவர் கொஞ்சம் அசவுகரியப்பட்டார் என்பது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தது.

கழுத்தில் அடி

கழுத்தில் அடி

இன்னிங்சின் 77வது ஓவரை வீசினார் ஜோப்ரா ஆர்ச்சர். முதல் ஷார்ட் பிட்ச் பந்தை வெற்றிகரமாக புல்ஷாட் ஆடி பவுண்டரிக்கு அனுப்பினார். ஆனால் அடுத்த பந்து கண்ட படி வேகமாக வந்து எழும்ப ஸ்மித் தன் கழுத்தை வலது புறமாகத் திருப்பினார்.

நிலைகுலைந்த ஸ்மித்

ஆனால், ஹெல்மெட் தலையில் இல்லாத, பாதுகாப்பில்லாத பகுதியில் பந்து வேகமாக தாக்கியது. நிலைகுலைந்த ஸ்மித் கீழே அப்படியே மல்லாக்க சாய்ந்தார். அவருக்கு கடும் வலியால் துடித்தது நன்றாக தெரிந்தது.

வெளியேறினார்

பிறகு எழுந்து நின்றார், மருத்துவர்கள் அதற்குள் வந்து முதலுதவி அளிக்க அவர்களுடன் பேசினார். தொடர்ந்து விளையாடாத நிலை ஏற்பட்டதால், அவர் பெவிலியன் நோக்கி நடந்தார். 80 ரன்களில் ஸ்மித் காயம் காரணமாக வெளியேறினார்.

Story first published: Sunday, August 18, 2019, 7:03 [IST]
Other articles published on Aug 18, 2019
English summary
Steve smith hit by archer bowling, retires hurt.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X