For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவின் அசைக்க முடியா தூண்.. இந்தியாவை அச்சுறுத்தும் ஒரே ஒரு வீரர்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக ஸ்டீவ் ஸ்மித் உருவெடுக்கவுள்ளார். அவரை சமாளித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நெருங்கி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரானது வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் நாக்பூரில் தொடங்கி மார்ச் 13ம் தேதியன்று அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் முடிவடையவுள்ளது.

இதற்காக முன்கூட்டியே இந்தியாவுக்கு வந்தடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூருவில் உள்ள மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல இந்திய வீரர்கள் நாக்பூரில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

அடப்பாவமே.. ரோகித் சர்மாவுக்கு 35 வயதிலா இந்த இக்கட்டான நிலைமை??.. ஆஸி, தொடரில் நிரூபித்தே தீரணும்! அடப்பாவமே.. ரோகித் சர்மாவுக்கு 35 வயதிலா இந்த இக்கட்டான நிலைமை??.. ஆஸி, தொடரில் நிரூபித்தே தீரணும்!

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

தொடர்ச்சியாக 3 முறை இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியுள்ளதால் எப்படியாவது சொந்த மண்ணில் இந்திய வீரர்களை வீழ்த்தியாக வேண்டும் என ஆஸ்திரேலிய அணி உள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியாவை வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என இந்திய அணியும் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர்.

ஸ்மித்தின் ஃபார்ம்

ஸ்மித்தின் ஃபார்ம்

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கப்போவது ஸ்டீவ் ஸ்மித்தாக தான் இருக்கும். சுழற்பந்துவீச்சின் சொர்க்கமாக பார்க்கப்படும் இந்திய களங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் மோசமாக திணறுவார்கள். ஏனென்றால் அவர்கள் வேகம் மற்றும் பவுன்ஸர்களுக்கு ஏற்ற களங்களில் விளையாடி பழகியவர்கள். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அதில் இருந்து சற்று மாறுபட்டவர் ஆகும்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஸ்மித் தனது கிரிக்கெட் பயணத்தை முதன்முதலில் சுழற்பந்துவீச்சாளராக தான் தொடங்கினார். இன்றும் ஸ்பின்னர்கள் நுணுக்கங்களை நன்கு அறிந்து வைத்திருப்பார். இதனாலேயே இந்தியாவில் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கில் ஜொலிக்கிறார். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி ஸ்பின்னர்கள் இருந்தும் கூட ஸ்மித்-ன் ரன் வேட்டையை தடுக்க முடிந்தது இல்லை.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

இந்தியாவுக்கு எதிராக இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 1742 ரன்களை குவித்துள்ளார். சராசரியாக ஒரு போட்டியில் 72.58 ரன்களை அடிக்கிறார். இதில் 8 சதங்களும், ஒரு அரைசதமும் அடங்கும். புஜாரா போன்ற நிதானமும், லெக் சைட் மற்றும் ஆஃப் சைட்களில் சுலபமாக பவுண்டரிக்கு அனுப்பும் திறமையும் ஸ்மித்திடம் உள்ளது. ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் விளையாடிய பல தொடர்களிலும் ஸ்டீவ் ஸ்மித்தின் ஃபார்ம் உச்சகட்டத்தில் உள்ளது. இதனால் இந்திய அணிக்கும், ரோகித் சர்மாவுக்கும் வல்லுநர்கள் சில எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

தனி ப்ளான்

தனி ப்ளான்

டாப் ஆர்டரில் களமிறங்கக்கூடிய ஸ்மித்தை வெகு விரைவாக அவுட்டாகினால் மட்டுமே பேட்டிங் வரிசையை தகர்க்க முடியும். ஒருவேளை ஒரு முனையில் ஸ்மித் நிலைத்துவிட்டால் மறுமுனையில் எப்படிப்பட்ட வீரரும் பார்டர்னர்ஷிப் அமைத்துவிடுவார்கள். எனவே ஸ்மித்திற்கு தனி வியூகத்துடன் ரோகித் சர்மா களமிறங்க வேண்டும்.

Story first published: Saturday, February 4, 2023, 11:06 [IST]
Other articles published on Feb 4, 2023
English summary
Australia's star player Steve Smith is the most dangerous batsmen against Indian in Test Cricket, here is the stats and details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X