For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிங்கம் களம் இறங்கப் போகுது... ரெடியாகுங்க ரசிகர்களே.. மீண்டும் "தல" ஆவாரா ஸ்டீவ் ஸ்மித்?

அடிலைட்: மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் வலம் வர தயாராகி விட்டார். அவர் கேப்டனாக செயலாற்ற விதிக்கப்பட்ட தடை முடிந்து விட்டதால் அவர் மீண்டும் கேப்டனாகவுள்ளார்.

Recommended Video

மீண்டும் கேப்டனாக போகும் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்துக்கு 2 ஆண்டுகள் கேப்டனாக செயலாற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. அது ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்து விட்டது. இதனால் மீண்டும் அவர் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

30 வயதாகும் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2018ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது பந்தை சுரண்டி சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார்.

ஸ்பினாச் மஷ்ரூம் கீன்வா.. கிரிக்கெட் பேட் பிடிச்ச கை சும்மா இருக்காதோ.. இவர் செஞ்ச வேலையை பாருங்க!!ஸ்பினாச் மஷ்ரூம் கீன்வா.. கிரிக்கெட் பேட் பிடிச்ச கை சும்மா இருக்காதோ.. இவர் செஞ்ச வேலையை பாருங்க!!

பந்து சுரண்டலில் சிக்கினார்

பந்து சுரண்டலில் சிக்கினார்

அந்த தொடரின்போது ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தார். இதையடுத்து அவருக்கு போட்டிகளில் விளையாட ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அத்தோடு கூடுதலாக மேலும் ஒரு வருடம் கேப்டனாக செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒரு வருடமாக அவர் வெறும் வீரராக மட்டும் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருடன் சேர்த்து மாட்டிய மூத்த வீரர் டேவிட் வார்னருக்கு ஆயுள் காலம் முழுவதும் கேப்டனாக செயல்பட தடை விதிக்கப்பட்டது.

வார்னருக்கு வாய்ப்பே இல்லை

வார்னருக்கு வாய்ப்பே இல்லை

இதனால் வார்னரால் ஒரு காலத்திலும் ஆஸ்திரேலியா கேப்டனாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் தற்போது சர்வதசே அரங்கில் சிறந்த வீரர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது டிம் பெயின் கேப்டனாக இருக்கிறார். ஆனால் அவரை எடுத்து விட்டு ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதேசமயம், டிம் பெயினுக்கு தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கரின் ஆதரவு இருக்கிறது.

டின் பெயின் சிறப்பாக செயல்படுகிறார்

டின் பெயின் சிறப்பாக செயல்படுகிறார்

இதுகுறித்து அவர் கூறுகையில் பெய்ன் கேப்டனாக பிரில்லியன்ட்டாக இருக்கிறார். கேப்டன் சுமையை வைத்துக் கொண்டு பேட்ஸ்மேனாக பரிமளிக்க ஸ்மித் விரும்ப மாட்டார் என்று கூறியிருந்தார். டிம் பெயின் தற்போது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கிறார். ஒரு நாள் மற்றும் டி20 கேப்டனாக ஆரோன் பின்ச் இருக்கிறார். இதற்கிடையே, தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறோம். எனவே மனோரீதியிலும், உடல் ரீதியிலும் பிட் ஆக இருப்பதற்கே நான் முக்கியத்துவம் தருகிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மீண்டும் கேப்டன் ஆவாரா?

மீண்டும் கேப்டன் ஆவாரா?

ஆஸ்திரேலிய அணி வரும் ஜூலை மாதத்தில் வங்கதேசம் சென்று டெஸ்ட் தொடரில் ஆட திட்டமிட்டுள்ளது. அதேபோல இங்கிலாந்துடன் ஒரு நாள் தொடருக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. அப்படியே நடந்தாலும் ஸ்மித் கேப்டனாவாரா என்பது விடை தெரியாத ஒரு கேள்வி. ஆனால் அவரை கேப்டனாக்கினால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு புது ரத்தம் பாய்ச்சுவார் என்பது நிஜம்தான்.

Story first published: Sunday, March 29, 2020, 16:41 [IST]
Other articles published on Mar 29, 2020
English summary
Former Australia Test captain Steve Smith is all set to don the Captain post again as the ban ends
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X