For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட்டை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்... 2வது இடத்திற்கு முன்னேற்றம்

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியை இரு அணிகளும் டிரா செய்துள்ளன.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சதமும் இரண்டாவது இன்னிங்சில் அரைசதமும் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

மன்னிச்சுக்கங்க சிராஜ்... இனவெறி தாக்குதலை ஏத்துக்கவே முடியாது.. டேவிட் வார்னர் வருத்தம் மன்னிச்சுக்கங்க சிராஜ்... இனவெறி தாக்குதலை ஏத்துக்கவே முடியாது.. டேவிட் வார்னர் வருத்தம்

இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலியை கீழிறக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்திற்கு தற்போது முன்னேறியுள்ளார்.

ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு

ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதன் 4வது போட்டி பிரிஸ்பேனில் வரும் 15ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. சிட்னியில் நடைபெற்ற 3வது போட்டி டிரா ஆகியுள்ளது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2வது இடத்திற்கு முன்னேறிய ஸ்மித்

2வது இடத்திற்கு முன்னேறிய ஸ்மித்

அவர் முதல் இன்னிங்சில் சதமும், இரண்டாவது இன்னிங்சில் அரைசதமும் எடுத்திருந்தார். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அவர் இரண்டாவது இடத்திற்கு தற்போது முன்னேறியுள்ளார். இரண்டாவது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

2வது இடத்தில் ஸ்மித்

2வது இடத்தில் ஸ்மித்

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்துவரும் நிலையில், 900 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும் 3வது இடத்தில் 870 புள்ளிகளுடன் விராட் கோலியும், லாபுசாக்னே மற்றும் பாபர் அசாம் முறையே 866 மற்றும் 781 புள்ளிகளுடன் 4வது மற்றும் 5வது இடத்திலும் உள்ளனர்.

ரஹானே 7வது இடம்

ரஹானே 7வது இடம்

புஜாரா 8வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 7வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளார். ரிஷப் பந்த் 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த சிட்னி போட்டியில் வலி நிவாரணி உள்ளிட்டவற்றை போட்டுக் கொண்டு சிறப்பாக விளையாடி 97 ரன்களை பந்த் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 12, 2021, 14:23 [IST]
Other articles published on Jan 12, 2021
English summary
Pujara moves to number 8, Rahane drops to number 7 in ICC test Rankings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X