For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO:சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...! ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித்

பிரிஸ்பேன்: ஓராண்டு தடைக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்மித், தாம் விளையாடிய முதல் போட்டியிலேயே அதிரடியாக ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான, ஒருநாள் உலககோப்பை தொடர் வரும் 30 ம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. அதற்காக பல்வேறு நாடுகள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேய அணி நியூசிலாந்து அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடியது.

Steve smith takes a one handed stunner on australia return

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் தடை முடிவடைந்து விட்டதால் இருவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். நியூசிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன், மாட்டின் குப்தில், போல்ட் ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளதால், இந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், பவுலிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 46.1 ஓவர்களில் 215 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக, டாம் பிளண்டெல் 77 ரன்கள் குவித்தார்.

இந்தப் போட்டியில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றது. ஜேசன் பெஹ்ரென்டோர்ப் வீசிய 33வது ஓவரில் நியூசிலாந்தின் டாம் லாதம் அடித்த பந்தை, மிட் விக்கெட்டில் இருந்த ஸ்மித் அட்டகாசமாக ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார்.

இதன்மூலம், தான் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டதை ஸ்மித் வெளிக்காட்டி இருக்கிறார். இந்த வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களின் முடிவில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Story first published: Tuesday, May 7, 2019, 10:39 [IST]
Other articles published on May 7, 2019
English summary
Steve Smith takes a one-handed stunner on Australia return.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X