For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிறந்த கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்.. 2015ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி

By Veera Kumar

துபாய்: ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் தட்டிச்சென்றுள்ளார்.

சர் கர்பீல்ட் சோபர்ஸ் டிராபி என கூறப்படும், இந்த விருதுகள் 2004ம் வருடம் முதல் அளிக்கப்பட தொடங்கியுள்ளன.

2015ம் ஆண்டுக்கான சிறந்த வீரரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி, இவ்வாண்டு செப்டம்பர் 13ம் தேதிவரை நடைபெற்றது. இதன் அடிப்படையில் ஸ்டீவ் ஸ்மித் விருதை தட்டிச்சென்றுள்ளார்.

டிராவிட், சச்சின்

டிராவிட், சச்சின்

ராகுல் டிராவிட் (2004), ஆன்ட்ரூ பிளின்டாப் மற்றும் ஜேக் காலிஸ் (2005), ரிக்கி பாண்டிங் (2006 மற்றும் 2007) சந்தர்பவுல் (2008), மைக்கேல் ஜான்சன் (2009), சச்சின் டெண்டுல்கர் (2010), ஜொனாதன் டிராட் (2011) குமார் சங்ககாரா (2012), மைக்கேல் கிளார்க் (2013), மைக்கேல் ஜான்சன் (2014) ஆகியோர் இதற்கு முன்பாக இந்த கவுரவம்மிக்க விருதை தட்டிச் சென்றவர்களாகும்.

இரு விருதுகள்

இரு விருதுகள்

இவ்வாண்டு சிறந்த டெஸ்ட் வீரர் என்ற பெருமையும் ஸ்டீவ் ஸ்மித்துக்கே கிடைத்துள்ளது. ஒரே நேரத்தில் இவ்விரு விருதுகளையும் ஸ்மித் பெற்றதன் மூலம், டிராவிட், கல்லீஸ், பாண்டிங், சங்ககாரா, கிளார்க், ஜான்சன் ஆகியோர் வரிசையில் ஓராண்டில், இரு விருதுகளை பெற்ற பட்டியலில் இணைந்துள்ளார்.

சிறந்த வீரர் ஸ்மித்

சிறந்த வீரர் ஸ்மித்

இவ்வாண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியல்: ஆண்டின் சிறந்த வீரர்-ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர்-ஸ்டீவ் ஸ்மித்.

ஒன்டேயில் டிவில்லியர்ஸ்

ஒன்டேயில் டிவில்லியர்ஸ்

2015ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்-டிவில்லியர்ஸ். பெண்கள் கிரிக்கெட்டின் சிறந்த ஒருநாள் வீரர்-மெக் லன்னிங் (ஆஸி.).

டி20 போட்டி

டி20 போட்டி

சிறந்த பெண்கள் டி20 கிரிக்கெட் வீராங்கனை-வெஸ்ட் இண்டீசின் ஸ்டாபேனை டைலர். டி20 போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்த வீரர்-டுப்ளசிஸ். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 56 பந்துகளில் 119 ரன்கள் விளாசியதற்காக இவ்விருது.

இப்படியும் விருதுகள்

இப்படியும் விருதுகள்

சிறந்த வளரும் வீரர்-ஜோஸ் ஹசில்வுட் (ஆஸி.), ஐசிசி அசோசியேட் கிரிக்கெட் வீரருக்கான விருது-ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சின் குர்ரம்கான். ஐசிசி கிரிக்கெட் ஸ்பிரிட்டுக்கான விருது-பிரெண்டன் மெக்கல்லம். சிறந்த நடுவர்-ரிச்சர்ட் கேட்டல்பர்க் (இங்கிலாந்து).

ஒரு இந்திய வீரரும் இல்லையே

ஒரு இந்திய வீரரும் இல்லையே

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த விருதுகள் பட்டியலில் இந்திய வீரர்கள் யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 23, 2015, 12:48 [IST]
Other articles published on Dec 23, 2015
English summary
Australia's captain Steve Smith today won both ICC Cricketer of the Year 2015 (Sir Garfield Sobers Trophy) and ICC Test Cricketer of the Year awards. South Africa's One Day Internationals skipper AB de Villiers took the ICC ODI Cricketer of the Year honour. There was no Indian in the list of awards this year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X