சச்சின் ஓய்வுக்கு அப்புறமா ஐபிஎல் பாக்கறதையே விட்டுட்டேன்.. சுஷ்மா வர்மா அதிரடி

டெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்தவரையில் தான் ஐபிஎல் போட்டிகளை பார்த்ததாகவும் அதன்பிறகு பார்ப்பதை விட்டுவிட்டதாகவும் இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்வுமன் சுஷ்மா வர்மா தெரிவித்துள்ளார்.

தர்மசாலாவில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை காண ஆவலுடன் சென்றதாகவும் ஆனால் அவர் அதில் விளையாடாததால் ஏமாற்றமடைந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

தோனியின் பேட்டிங் ஸ்டைல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் இந்திய கேப்டன்களில் சிறப்பானவர் என்றும் சுஷ்மா குறிப்பிட்டார்.

விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மா

விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மா

இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்வுமனாக இருப்பவர் சுஷ்மா வர்மா. இவர் இந்திய மகளிர் அணிக்காக இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி, 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஐபிஎல் பார்ப்பதை விட்டுவிட்டேன்

ஐபிஎல் பார்ப்பதை விட்டுவிட்டேன்

தற்போது அதிகமாக ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதை தான் விட்டுவிட்டதாக சுஷ்மா தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தவரையில் தான் ஆர்வமாக போட்டிகளை பார்த்ததாகவும், அவர் ஓய்வு பெற்றவுடன் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதை விட்டுவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஏமாற்றமடைந்த சுஷ்மா வர்மா

ஏமாற்றமடைந்த சுஷ்மா வர்மா

தர்மசாலாவில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்று ஆடிய ஐபிஎல் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை காண தான் ஆவலுடன் சென்றதாகவும் ஆனால் அந்த போட்டியில் அவர் ஆடாததால் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும், அதுமுதல் ஐபிஎல் போட்டிகளை பார்க்கக்கூடாது என்று தான் கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான இந்திய கேப்டன்

சிறப்பான இந்திய கேப்டன்

சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ள முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சுஷ்மா தெரிவித்துள்ளார். அவரை நேரில் சந்தித்து தானும் இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் என்று தான் கூறியதாகவும் பதிலுக்கு தோனி தொடர்ந்து சிறப்பாக விளையாட வாழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தோனியின் பேட்டிங் ஸ்டைல் மிகவும் பிடிக்கும் என்றும் அவர் சிறப்பான இந்திய கேப்டன் என்றும் அவர் மேலும் கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
I like Dhoni's style of batting and he was a great Indian captain -Sushma
Story first published: Tuesday, August 25, 2020, 18:09 [IST]
Other articles published on Aug 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X