For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பாலோயர்கள்... உற்சாகத்தில் இந்திய அணி... ரசிகர்களுக்கு நன்றி!

டெல்லி :இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த பதிவுகளின்மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 மில்லியன் பாலோயர்களை இந்திய அணி பெற்றுள்ளது.

 'இங்கிலாந்தை யாரும் கண்டுக்காததே நல்லதுக்கு தான்' - சபாஷ்! சரியான பாயிண்ட் 'இங்கிலாந்தை யாரும் கண்டுக்காததே நல்லதுக்கு தான்' - சபாஷ்! சரியான பாயிண்ட்

இதுகுறித்து மகிழ்ச்சியும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ள இந்திய அணி, வலிமையான இன்ஸ்டா குடும்பம் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளது.

 தொடர் பதிவுகள்

தொடர் பதிவுகள்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த அணி வீரர்கள் மற்றும் அணியின் விவரங்கள், வெற்றிகள், உற்சாக பதிவுகள், வருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.

16 மில்லியன் பின்தொடர்பவர்கள்

16 மில்லியன் பின்தொடர்பவர்கள்

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்றுள்ளதாக இந்திய அணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. விராட் கோலி, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பும்ரா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு தொடர்களை வெற்றி கொண்டுள்ளது இந்திய அணி. மேலும் டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இமாலய சாதனை படைத்துள்ளது. இவற்றின் ஒவ்வொரு பதிவையும் இந்திய அணி தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டது.

ஐபிஎல் 2021 தொடர் குறித்த பதிவுகள்

ஐபிஎல் 2021 தொடர் குறித்த பதிவுகள்

இதேபோல தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடர் குறித்தும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறது. வீரர்களின் குவாரன்டைன், பயிற்சிகள், நெட் பயிற்சிகள் உள்ளிட்டவற்றையும் பதிவிட்டது. மேலும் ஐபிஎல் 2021 குறித்த பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Story first published: Wednesday, February 3, 2021, 18:48 [IST]
Other articles published on Feb 3, 2021
English summary
The Instagram post consists of a cool poster, which has the likes of Virat Kohli, Harmanpreet Kaur and Jasprit Bumrah on it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X