தொடர் பதிவுகள்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த அணி வீரர்கள் மற்றும் அணியின் விவரங்கள், வெற்றிகள், உற்சாக பதிவுகள், வருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.
16 மில்லியன் பின்தொடர்பவர்கள்
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்றுள்ளதாக இந்திய அணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. விராட் கோலி, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பும்ரா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.
சிறப்பான வெற்றி
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு தொடர்களை வெற்றி கொண்டுள்ளது இந்திய அணி. மேலும் டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இமாலய சாதனை படைத்துள்ளது. இவற்றின் ஒவ்வொரு பதிவையும் இந்திய அணி தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டது.
ஐபிஎல் 2021 தொடர் குறித்த பதிவுகள்
இதேபோல தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடர் குறித்தும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறது. வீரர்களின் குவாரன்டைன், பயிற்சிகள், நெட் பயிற்சிகள் உள்ளிட்டவற்றையும் பதிவிட்டது. மேலும் ஐபிஎல் 2021 குறித்த பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.