"12 ஆண்டுகள் பதட்டத்தில் இருந்தேன்" - சச்சினுக்குள் இப்படியொரு மனக்குமுறலா!

மும்பை: தனது கிரிக்கெட் வாழ்க்கையின் போது ஏற்பட்ட மனஅழுத்தத்தை குறைக்க, எப்படியெல்லாம் போராடினேன் என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.

Sachin Tendulkarக்குள் மனக்குமுறலா! Anxietyஐ எப்படி வென்றார் | OneIndia Tamil

நாட்டில் வீசி வரும் கொரோனா 2வது அலை காரணமாக, கொத்து கொத்தாக மக்கள் மடிந்து வருகின்றனர். நியூஸ் பேப்பர் தொடங்கி, பேஸ்புக் டைம்லைன் வரை எதைத் திறந்தாலும், எதைப் படித்தாலும் அதில் கொரோனா மட்டுமே செய்தியாய் இடம்பிடித்திருக்கும்.

கோடிகளில் புரண்டாலும்.. எதுவும் உதவலையே - மரண பயம் காட்டிய கொரோனா

இதனால், பயமும், மனஅழுத்தமுமே மக்களை சூழ்ந்துள்ளது. பயமே பாதி பேரை கொன்று விடுகிறது. இந்த நிலையில், மன அழுத்தத்திலிருந்து விடுபட, தான் என்னவெல்லாம் செய்தேன் என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை உதாரணமாக தெரிவித்துள்ளார்.

ஒரு கப் டீ

ஒரு கப் டீ

அதில் அவர், "நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில், 10-12 ஆண்டுகளாக பதட்டமாக தான் இருந்தேன். பல தூக்கமில்லாத இரவுகளை அனுபவித்தேன். பின்னர் இதுவும் எனது தயாரிப்பின் ஒரு பகுதி என்பதை ஏற்கத் தொடங்கினேன். என் மனதை அமைதியாக வைத்திருக்க நான் சில விஷயங்களை செய்யத் தொடங்கினேன். டிவி பார்ப்பது , வீடியோ கேம்களை விளையாடுவது என்று என்னை நானே நிதானமாக வைத்துக் கொள்வேன். இவ்வளவு ஏன், காலையில் ஒரு கப் தேநீர் தயாரிப்பது கூட எனது விளையாட்டுக்கு மனரீதியாக தயாராவதற்கு பெரிதும் உதவியது.

அதுவே பழக்கமானது

அதுவே பழக்கமானது

அதேபோல், என் துணிகளை நானே அயர்ன் பண்ணுவேன். எனது பையில் பொருட்களை அடுக்குவேன். இவையெல்லாம், என் சகோதரர் எனக்கு சொல்லிக் கொடுத்தது. பிறகு அதுவே எனக்கு பழக்கமானது. இவை அனைத்தையும், நான் இந்தியாவுக்காக விளையாடிய கடைசி போட்டி வரை கடைப்பிடித்தேன்.

அதுவே தீர்வு

அதுவே தீர்வு

உங்கள் உடல்நலனில் ஏதேனும் கோளாறு என்றால், மருத்துவர் அதற்கான தீர்வை கண்டுபிடித்து சொல்வார். அதேபோல் தான் மனநல கோளாறும். வாழ்க்கையில் ஏற்ற, இறக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதில், நீங்கள் சரிவுகளை சந்திக்கும் நேரங்களில், உங்களை சுற்றி எப்போதும் மனிதர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரச்னைக்கு தீர்வு

பிரச்னைக்கு தீர்வு

எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே இங்கு முக்கியமானது. வீரருக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும். நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினால், தீர்வுகள் கிடைக்கப் பெறும். சென்னையில், எனக்கு தோசை சுட்டுக் கொடுத்த நபர் தான், 'என்னால் சரியாக பேட்டை சரியாக சுழற்ற முடியாததற்கு, நான் அணியும் elbow guard தான் காரணம் என்ற உண்மையை கண்டறிந்து சொல்லி, எனது பிரச்னைக்கு தீர்வு தேடிக் கொடுத்தார்" என்று தனது பழைய நினைவுகளை சிலாகித்து பேசினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
anxiety for 10-12 years of my career Sachin - சச்சின்
Story first published: Monday, May 17, 2021, 15:19 [IST]
Other articles published on May 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X