For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது ரொம்ப தப்புங்க.. பொங்கி எழுந்த பிராட், பில்லிங்ஸ்.. ஒரே டிவிட் மூலம் வாயை அடைத்த அலெக்ஸ் ஹெல்ஸ்

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா செய்த மான்கட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐசிசி விதிகளின்படியே இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்து இருக்கிறார் .

இருப்பினும் இதனை ஒப்புக்கொள்ளாத இங்கிலாந்து வீரர்கள் சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர் .

உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டு.. ஆனால் ஈரப்பதத்தால் ஆட்டத்தை கைவிடும் நிலை.. விரக்தியில் ரசிகர்கள் உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டு.. ஆனால் ஈரப்பதத்தால் ஆட்டத்தை கைவிடும் நிலை.. விரக்தியில் ரசிகர்கள்

பிராட் விமர்சனம்

பிராட் விமர்சனம்

இங்கிலாந்து மகளிர் அணியை மூன்றுக்கு 0 என்ற கணக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி ஒயிட்வாஷ் செய்தது. இதனை சற்றும் பொறுத்து கொள்ள முடியாத இங்கிலாந்து வீரர்கள் சமூக வலைத்தளத்தில் இந்த வெற்றியை விமர்சித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராட், ஒரு ரன் அவுட் மூலம்தான் வெற்றி பெற வேண்டுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ரசிகர்கள் பதிலடி

ரசிகர்கள் பதிலடி

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ரசிகர்கள், ஐசிசி உலக கோப்பையை 2019 ஆம் ஆண்டு தாங்கள் வென்றது எப்படி என்று நினைவிருக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் 2013 ஆம் ஆண்டு பிராட் கேட்ச் ஆகியும் களத்தை விட்டு நகராமல் அங்கே நின்றது நினைவு இருக்கிறதா என்று கூறி அந்த வீடியோவையும் பதிவிட்டு வருகின்றனர்.

சாம் பில்லிங்ஸ் கேள்வி

சாம் பில்லிங்ஸ் கேள்வி

அதேபோன்று சிஎஸ்கே வின் முன்னாள் வீரரும் இங்கிலாந்து அணியை சேர்ந்த சாம்பில்லிங்ஸ் கிரிக்கெட்டை விளையாடும் எந்த ஒரு நபரும் இப்படி ஒரு செயலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .இது கிரிக்கெட்டே கிடையாது என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.இதற்கு சக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் பதிலடி

அலெக்ஸ் ஹேல்ஸ் பதிலடி

எதிர் திசையில் இருக்கும் வீரர்கள் பந்தை வீசும் போது கிரீஸ் உள்ளே நிற்க அவ்வளவு என்ன கஷ்டமா என்று பதில் அளித்துள்ளார். அலெக்ஸ் ஹேல்சின் இந்த பதில் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதனை கொண்டாடி வரும் இந்திய ரசிகர்கள் இங்கிலாந்தில் ஒரு நபராவது அறிவுடன் பேசி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோன்று இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின் தமது பெயர் ஏன் டிரெண்டாகி வருகிறது என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Story first published: Tuesday, September 27, 2022, 10:51 [IST]
Other articles published on Sep 27, 2022
English summary
stuart broad and sam billings criticize mankad - Alex hales befitting reply
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X