For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசனுடன் சு.சுவாமி சந்திப்பு - சிஎஸ்கே தடை குறித்து ஆலோசனை!

By Karthikeyan

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் விளையாட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு, இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு, இதற்கான உத்தரவை ஜூலையில் பிறப்பித்தது. இந்த தடையை நீக்கக்கோரி சென்னை ஹைகோர்டில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் மனு தாக்கல் செய்தார்.

Subramanian Swamy meets former BCCI President Srinivasan

அந்த மனுவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளன. கிரிக்கெட் விளையாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தலைமறைவு குற்றவாளி லலித் மோடி மற்றும் சிலர் குற்ற சதி செய்தனர்.

அதன் விளைவாக, இரு அணிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டு அணிகளுக்கும் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அடையாறில் உள்ள ஸ்ரீநிவாசனின் வீட்டிற்கு சுப்பிரமணியன் சுவாமி இன்று வந்தார். அப்போது இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள 2 ஆண்டுகள் தடை குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Story first published: Friday, November 27, 2015, 21:03 [IST]
Other articles published on Nov 27, 2015
English summary
bjp leader Subramanian Swamy meets former BCCI President Srinivasan on his home
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X