For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் கட்டுரை ஒன்றை வெளியிட்டதற்காக பிரபல ஆங்கில செய்தித்தாள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Ben Stokes angry on The sun Magazine

லண்டன்: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் கட்டுரை ஒன்றை வெளியிட்டதற்காக பிரபல ஆங்கில செய்தித்தாள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடம் ஆகும். உலகக் கோப்பை தொடர், ஆஷஸ் தொடர் இரண்டிலும் அவர் மிக சிறப்பாக விளையாடி சாதனை படைத்தார்.

இந்த நிலையில்தான் ஆங்கில செய்தி நாளேடான 'தி சன்' வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் குடும்ப பின்னணி மற்றும் முக்கியமான ரகசியங்களை வெளியிட்டுள்ளது.

என்ன

என்ன

இதன் செய்தி கட்டுரையை வெளியிட்ட 'தி சன்' நாளிதழிலின் மீது தற்பொழுது பென் ஸ்டோக்ஸ் தனது கடும் கோபத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். 'தி சன்' நாளிதழ் "ஸ்டோக்ஸின் ரகசிய சோகம்" என்னும் தலைப்பில் இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதில் பென் ஸ்டோக்ஸின் சகோதரரும் சகோதரியும் ஸ்டோக்சின் வளர்ப்பு அப்பாவால் சிறு வயதில் கொலை செய்யப்பட்டனர், என்றுள்ளது.

மோசம்

மோசம்

அதாவது ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது அம்மாவின் முன்னாள் கணவரால் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. மேலும் அந்த கட்டுரையில் அவரது குடும்பத்தின் சோகமான கடந்த கால விவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.

என்ன கண்டனம்

என்ன கண்டனம்

இன்று ட்விட்டரில் ஸ்டோக்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், மிகப்பெரிய கடிதம் ஒன்றை அவர் இணைத்துள்ளார். அந்த செய்தி நிறுவனம் நியூசிலாந்தில் உள்ள எனது பெற்றோரின் வீட்டிற்கு ஒரு நிருபரை அனுப்பி இது பற்றிய விவரங்களை கேட்டு உள்ளனர். எங்கள் குடும்பத்திற்கு அவமதிப்பு தரும் வகையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த கட்டுரை கடும் கோபத்தை தருகிறது என்றுள்ளார்.

வேறு என்ன

வேறு என்ன

மேலும் ட்விட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், தி சன் நாளிதழ், 31 ஆண்டுகளுக்கும் முன் சென்று எனது குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த வேதனையான நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. இத்தகைய தரம் தாழ்ந்த மற்றும் இழிவான செயல்களை மேற்கொள்ளும் பத்திரிகைகளை கண்டிக்க வேண்டும்.

30 வருடம் ஏன்

30 வருடம் ஏன்

முப்பது வருடங்களுக்கும் மேலாக, எனது குடும்பத்தினர் தங்களுக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியான சம்பவம் தொடர்பான விவரங்களை மறக்க முயன்று யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காக்க மிகுந்த அக்கறை எடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று, தி சன் ஆங்கில நாளிதழ், நியூசிலாந்தில் உள்ள எனது பெற்றோரின் வீட்டிற்கு ஒரு 'நிருபரை' அனுப்பி இந்த விவரத்தை கேட்டு அவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏன் தவறு

ஏன் தவறு

மக்களின் தனிப்பட்ட சோகத்தை வைத்து அவர்களின் முதல் பத்து நிரப்புவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. எனது பெற்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்க எனது பெயரைப் ஒரு சாக்காக பயன்படுத்துவது முற்றிலும் அருவருப்பானது. எனது பெற்றோர், மனைவி, குழந்தைகள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை ஊடகங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டேன்.

30 வருடம்

30 வருடம்

இது பத்திரிகை ஊடகங்களின் மிகக் கீழ்த்தரமான செயல், இதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவைப் பொருட்படுத்தாமல் அதனால் தங்களுக்கு வரும் லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. இது முற்றிலும் ஒழுங்கற்றது. கட்டுரையில் கடுமையான தவறுகளும் உள்ளன.

வேண்டாம்

வேண்டாம்

இது கடும் சேதத்தை எங்கள் குடும்பத்திற்கு தந்து இருக்கிறது. நாம் அனைவரும் பத்திரிகைகள் எவ்வாறு நடந்துகொள்ள அனுமதிக்கிறோம் என்பதை தீவிரமாக ஆராய வேண்டும். இது இப்போது பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தாலும், தயவுசெய்து இனி எனது குடும்பத்தின் தனிப்பட்ட விவரங்களை மதிக்க சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் கமெண்டில் கூறியுள்ளார்.

ஓய்வு

ஓய்வு

ஆஷஸ் 2019 தொடருக்கு பின்னர் ஸ்டோக்ஸ் தற்போது சிறிது பிரேக் எடுத்து ஓய்வில் உள்ளார. ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 8 விக்கெட்டுகள் மற்றும் இரண்டு சதங்கள் உட்பட 441 ரன்கள் எடுத்தார.

Story first published: Tuesday, September 17, 2019, 18:49 [IST]
Other articles published on Sep 17, 2019
English summary
Sun Magazines news on Ben Stokes stepfather goes viral makes new controversy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X