For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரா இப்படி? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன கிரிக்கெட் ஜாம்பவான்!

மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் இந்த லாக்டவுனில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி விட்டார்.

எப்போதும் கிரிக்கெட் வர்ணனை மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் கிளீன் ஷேவ் செய்து கொண்டு இளம் வீரர் போலவே வலம் வரும் கவாஸ்கர் இப்போது வெள்ளை தாடியுடன் இருக்கிறார்.

இந்த லாக்டவுனில் தன் வாழ்க்கை எப்படி மாறிப் போனது? மிகப் பெரிய அளவுக்கு எடை குறைந்துள்ளது பற்றி எல்லாம் மனம் திறந்து பேசி உள்ளார்.

90களில் இந்திய அணி சச்சினை மட்டுமே நம்பிக்கிட்டு இருந்துச்சு -மஞ்ச்ரேகர்90களில் இந்திய அணி சச்சினை மட்டுமே நம்பிக்கிட்டு இருந்துச்சு -மஞ்ச்ரேகர்

கிரிக்கெட் வர்ணனை

கிரிக்கெட் வர்ணனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலில் பத்தாயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் தான். கிரிக்கெட்டில் கோலோச்சிய பின் கிரிக்கெட் போட்டி வர்ணனையில் கொடி கட்டிப் பறந்து வருகிறார் கவாஸ்கர். பல ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனை செய்து வருகிறார்.

லாக்டவுனில் கவாஸ்கர்

லாக்டவுனில் கவாஸ்கர்

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் நேரத்தில் அதிக தாடியுடன் காட்சி அளிக்கிறார். அதுவும் வெள்ளை தாடியில் அவரை பார்த்த போது அடையாளமே தெரியவில்லை. தன் லாக்டவுன் வாழ்க்கை பற்றி இந்தியா டுடேவுக்கு வீட்டில் இருந்தபடியே பேட்டி அளித்துள்ளார்.

வெள்ளை தாடி

வெள்ளை தாடி

இந்த லாக்டவுனில் தான் வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ்ந்து வருவதாக கூறி உள்ளார். மெதுவாக எழுந்து, குறைவாக உண்டு, எடை குறைந்து இருப்பதாக கூறினார். கிரிக்கெட்டுக்காக எப்போதும் ஓடிக் கொண்டே இருந்த நிலையில், இது அவருக்கு பெரிய மாற்றமாக உள்ளது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

அவர் அறிமுகம் ஆன போட்டியில் என்ன எடை இருந்தாரோ அதை விட 30 கிராம் மட்டுமே எடை அதிகமாக இருப்பதாக கூறினார். இந்த லாக்டவுனில் டயட் கூட கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக கூறினார். அந்த டயட் காரணமாக அதிக எடையை குறைத்துள்ளார்.

மாறிய வாழ்க்கை

மாறிய வாழ்க்கை

காலையில் மெதுவாக எழுந்திருப்பது, மாலையில் மாடியில் நடை பயிற்சி செய்வது, மாலையில் டிவி சீரியல் பார்ப்பது என தன் வாழ்க்கை மாறி இருப்பதாகவும் கூறினார் கவாஸ்கர். அதே சமயம் தான் வீட்டிலேயே தங்கி இருப்பதில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கூறினார்.

குடும்பம் இங்கே இல்லை

குடும்பம் இங்கே இல்லை

வீட்டிலேயே இருக்கும் இந்த படு மெதுவான வாழ்க்கையில், தன் முழு குடும்பமும் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பேன். தற்போது ஸ்மார்ட்போன் மூலம் குடும்பத்தினருடன் தான் பேசி வருவதாகவும் கூறினார்.

இந்த உதவி ஒண்ணுமே இல்லை

இந்த உதவி ஒண்ணுமே இல்லை

கவாஸ்கர் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக 59 லட்சம் கொடுத்து இருந்தார். அது பற்றி கேட்ட போது சிலர் செய்யும் உதவிக்கு முன் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என அடக்கமாக கூறினார். அது என்ன 59 லட்சம் நிதி உதவி? அது பற்றியும் கூறினார்.

59 லட்சம் ஏன்?

59 லட்சம் ஏன்?

தான் இந்தியாவுக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 35 சதம் அடித்ததாகவும், அதனால் பிரதமர் நிவாரண நிதியாக 35 லட்சம் அளித்ததாகவும், மும்பை அணிக்காக 24 சதம் அடித்ததால் 24 லட்சம் நிதி வழங்கியதாகவும் கூறினார்.

Story first published: Monday, May 18, 2020, 20:03 [IST]
Other articles published on May 18, 2020
English summary
Sunil Gavaskar appear with a white beard in this lockdown. He shares his lockdown experience. It seems he enjoy this ultra slow life.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X