For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர்களின் உடற்மொழியே சரியில்லை... பிட்ச் மீதான குற்றச்சாட்டு... பதிலடி கொடுத்த கவாஸ்கர்

அகமதாபாத்: 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர்களின் உடற்மொழி ஏமாற்றம் அளித்ததாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பிட்ச் மோசமாக இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

பிபின் சிங் ஹாட்-ட்ரிக்... 6 கோல் அடித்து வெற்றி பெற்ற மும்பை சிட்டி எப்சி.. மிகச்சிறப்பு! பிபின் சிங் ஹாட்-ட்ரிக்... 6 கோல் அடித்து வெற்றி பெற்ற மும்பை சிட்டி எப்சி.. மிகச்சிறப்பு!

இந்நிலையில் அனைவரின் குற்றச்சாட்டிற்கும் பதிலளிக்கும் விதமாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மோசம்

மோசம்

அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவடைந்தது. மொத்த எடுக்கப்பட்ட 30 விக்கெட்களில் 28 விக்கெட்கள் ஸ்பின்னர்கள் எடுத்ததாகும். இதனால் பேட்டிங்கிற்கு சுத்தமாக பிட்ச் ஒத்துழைக்கவில்லை என்றும் பிட்ச் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்ததாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

ஐசிசி மீதே குற்றச்சாட்டு

ஐசிசி மீதே குற்றச்சாட்டு

இது குறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன், இந்தியா போன்ற பலமான நாடுகளை கேள்வி கேட்க பல் இல்லாத அமைப்பாக ஐசிசி செயல்படுகிறது. இந்தியா அவர்களுக்கு ஏற்றார் போல் எப்படிப்பட்ட பிட்சையும் தயார் செய்கிறது. அது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் கெடுகிறது என தெரிவித்துள்ளார்.

 விளக்கம்

விளக்கம்

இது குறித்து பேசியுள்ள கவாஸ்கர், ஷார்ப்பான டேர்னிங் மற்றும் முறையில்லாத பவுன்ஸ் இருந்தால் மட்டுமே மோசமான பிட்ச் ஆகும். ஆனால் இது பந்து நலுவ கூடிய பிட்ச் ஆகும். இங்கு பேட்ஸ்மேன்கள் பந்து டேர்ன் ஆகும் என நினைக்கும் போது நேராக வரும். அவர்கள் கவனத்துடன் ஆடிருக்க வேண்டும்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கும் போது காட்டிய உடற்மொழி தான் அவர்களின் தோல்விக்கு காரணம். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, கோலி களத்திற்கு வந்தால் பொழிவுடன் வருவார்கள். ஆனால் இங்கிலாந்தில் ரூட்டை தவிர அனைவரும், யாரோ அவர்களை அடைத்து வைத்து கட்டுப்படுத்துவது போல இருந்ததாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரக்கு

அரக்கு

பந்தின் மீது அதிகப்படியான அரக்கு பூசப்பட்டதுதான் பேட்டிங் மோசமானதற்கு காரணமா என்ற கேள்விக்கு பதிலளித்த கவாஸ்கர், அதெல்லாம் சொந்த கருத்துகளை சரியென நிரூபிப்பதற்கு கூறப்படுவதாகும். பேட்ஸ்மேன்கள் லைனை சரியாக பார்த்து கவனித்து ஆடிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, February 27, 2021, 18:00 [IST]
Other articles published on Feb 27, 2021
English summary
Sunil Gavaskar Disappointed on England batsmen body language on 3rd test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X