For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர் சார்.. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 59 லட்சம்.. கவாஸ்கர் அதிரடி நன்கொடை

மும்பை: முன்னாள் தொடக்க ஆட்டக்காரர், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர், பிரதமர் மற்றும் மகாராஷ்டிர முதல்வரின் கொரோனா சிறப்பு நிதிக்கு மொத்தமாக ரூ. 59 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இதில் பிரதமர் நிதிக்கு ரூ. 35 லட்சமும், மகாராஷ்டிர முதல்வர் நிதிக்கு ரூ. 24 லட்சமும் அவர் அளித்துள்ளார். அதேபோல சத்தேஸ்வர் புஜாராவும் என்ன தொகை என்று குறிப்பிடாமல் நன்கொடை அளிளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அளித்துள்ளது. இதுதவிர பிசிசிஐ தலைவர் கங்குலியும் தனிப்பட்ட முறையில் கொடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரும் அளித்துள்ளார்.

எனக்கு அது பிடிச்சிருக்கு... ஸ்டைரிஸ் இப்படி சொல்ல... மஞ்ச்ரேகர் வேறமாதிரி சொல்றாரு!எனக்கு அது பிடிச்சிருக்கு... ஸ்டைரிஸ் இப்படி சொல்ல... மஞ்ச்ரேகர் வேறமாதிரி சொல்றாரு!

விராட் கோலி உதவி

விராட் கோலி உதவி

விராட் கோலி, அனுஷ்கா சர்மாவும் தாராள நிதியுதவி அளித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது கவாஸ்கரும், புஜாராவும் இணைந்துள்ளனர். சுனில் பிரதமர் நிதிக்கு ரூ. 35 லட்சமும், மகாராஷ்டிர முதல்வர் நிதிக்கு ரூ. 24 லட்சமும் அளித்துள்ளார். சத்தேஸ்வர் புஜாராவும் பிரதமர் நிதிக்கு நிதியுதவி அளித்துள்ளார். ஆனால் என்ன தொகை என்பதை அவர் பகிரங்கமாக சொல்லவில்லை.

கவாஸ்கர் அளித்த உதவி

கவாஸ்கர் அளித்த உதவி

கவாஸ்கர் அளித்த நிதியுதவி குறித்த விவரத்தை அவர் வெளியிடவில்லை. மாறாக முன்னாள் மும்பை கேப்டன் அமோல் மஜூம்தார்தான் இதுபற்றி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மஜூம்தார் போட்ட டிவீட்டில் சுனில் கவாஸ்கர் ரூ. 59 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

புஜாரா விடுத்த கோரிக்கை

புஜாரா விடுத்த கோரிக்கை

புஜாரா கூறுகையில், மக்களுக்காக போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருமே தியாக மனப்பான்மையுடன் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். எனது குடும்பமும், நானும் பிரதமர் நிதிக்கும், குஜராத் முதல்வர் நிதிக்கும் நிதியுதவி செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

அனைவரும் உதவ வேண்டும்

அனைவரும் உதவ வேண்டும்

மேலும் அவர் கூறுகையில், களப் பணியாற்றும் அனைவருக்கும் நாம் நன்றியுடன் இருப்போம். அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். நாட்டுக்கு பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. நாட்டுக்கு துணை நிற்போம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து இதுபோல பல முன்னாள், இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் நிதியுதவி அளித்த வண்ணம் உள்ளனர்.

Story first published: Tuesday, April 7, 2020, 22:09 [IST]
Other articles published on Apr 7, 2020
English summary
Former Cricketer Sunil Gavaskar has Donated Rs.59 Lakh for Coronavirus relief fund
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X