For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அதை செய்தே தீரனும், இல்லைனா ரொம்ப கஷ்டம்”.. வங்கதேச டெஸ்ட் தொடர்.. சுனில் கவாஸ்கர் முக்கிய அட்வைஸ்!

மும்பை : வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.

வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது போட்டியிலும் கடைசி ஓவரில் துரதிஷ்டவசமாக தோல்வியடைந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என வங்கதேசம் வென்று அசத்தியது.

வைட் வாஷை தவிர்க்க வேண்டும் என்றால் இந்திய அணி கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

பாக். தோல்வியால் இந்தியாவுக்கு அடித்த லக்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு பிரகாசம்..விவரம் பாக். தோல்வியால் இந்தியாவுக்கு அடித்த லக்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு பிரகாசம்..விவரம்

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவிருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் தான் கேப்டன் ரோகித் சர்மா இந்தியாவுக்கு திரும்புகிறார். கை விரல்களில் காயம் ஏற்பட்ட அவர், கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் எனக்கூறப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடவில்லை எனக்கூறப்படுகிறது.

கவாஸ்கரின் விளக்கம்

கவாஸ்கரின் விளக்கம்

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன் செய்ய வேண்டிய விஷயம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், இந்தியா முதலில் தனது பலமான அணியை இறுதி செய்ய வேண்டும். டெஸ்ட் தொடருக்கு தற்போது இருந்தே நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குமான அணிகளில் வித்தியாசம் இருக்கும் என்பதால், அடுத்த தொடரையாவது வெல்ல வேண்டும்.

 கண்டிப்பாக தேவை

கண்டிப்பாக தேவை

3வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும். அப்போது தான் 2 - 1 என தொடரின் முடிவுகள் வரும். இதன் மூலம் அடுத்து வரும் டெஸ்ட் தொடருக்கான நம்பிக்கை வீரர்களிடையே அதிகரிக்கும். ரோகித் சர்மா, மற்றும் குல்தீப் சென் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறிய சூழலில், பலமான அணியை தேர்வு செய்வதே சரியாக இருக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

போட்டிகள் எப்போது

போட்டிகள் எப்போது

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே 3வது ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 10ம் தேதியன்று நடைபெறவுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வருவதால், மோசமான தோல்வியை பெறாமல் இந்திய அணி தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் இல்லாததால் கே.எல்.ராகுல் அதை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Thursday, December 8, 2022, 20:46 [IST]
Other articles published on Dec 8, 2022
English summary
Former Indian Cricketer Sunil gavaskar gives a important advice to Team India ahead of Test Series against bangladesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X