For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தோனியால் எந்த பயனும் இல்லை”.. டி20 உலகக்கோப்பையில் என்ன நடக்கும்.. உண்மையை புட்டு வைத்த கவாஸ்கர்!

அமீரகம்: இந்திய அணியில் எம்.எஸ்.தோனியின் செயல்பாடுகள் பெரிய அளவில் வொர்க் அவுட்டாகாது என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

T20 World Cup: Dhoni Throwdown to Indian Batters

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் இன்று முதல் அமீரகத்தில் தொடங்கவுள்ளன.

இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அக்டோபர் 24-ம் தேதி முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

'அவர்கிட்ட மட்டும் சிக்கக்கூடாது’.. இந்திய டாப் ஆர்டருக்கான பாக்.எமன்.. ஸ்பெஷல் பயிற்சியில் கோலி! 'அவர்கிட்ட மட்டும் சிக்கக்கூடாது’.. இந்திய டாப் ஆர்டருக்கான பாக்.எமன்.. ஸ்பெஷல் பயிற்சியில் கோலி!

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட இருப்பதால் ரசிகர்களிடம் ஏகபோகத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

பேசப்படும் கருத்துகள்

பேசப்படும் கருத்துகள்

பாகிஸ்தானை விட இந்திய அணி மிகவும் பலமான படையை கொண்டுள்ளது. குறிப்பாக டாப் ஆர்டரில் ரோகித், விராட், கே.எல்.ராகுல் மற்றும் பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா என அனுபவ வீரர்கள் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க 3 முறை ஐசிசி கோப்பை வென்று கொடுத்த தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவரின் வருகை கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

தோனியின் செயல்பாடு

தோனியின் செயல்பாடு

இந்நிலையில் இந்த தொடரில் தோனியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் ? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் என்னைப் பொறுத்தவரை வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது சீக்கிரமாக நடைபெற்று முடியும் போட்டி என்பதால், ஓய்வறையில் வேண்டுமானாலும் வீரர்களை தோனி தயார் செய்து அனுப்பலாம். களத்தில் எதுவும் செய்ய முடியாது.

தோனியால் பலன் இல்லை

தோனியால் பலன் இல்லை

ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் அணிக்கு தேவையான வியூகம் அமைத்தல், ஆட்டத்தின் இடைவெளியின் போது கோலி மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு அட்வைஸ் கூறலாம். ஆனால் களத்தில் இருக்கும் அழுத்தம், ப்ளான்களை மாற்றுவது, ஆட்டத்தை கொண்டு செல்வது என அனைத்து வீரர்களிடம் மட்டுமே உள்ளது. எனவே தோனியால் அணியில் பெரியளவில் பலன் ஏதும் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, October 23, 2021, 16:32 [IST]
Other articles published on Oct 23, 2021
English summary
Sunil Gavaskar gives reply for an hype on MS Dhoni's role with Team India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X