For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் பலவீனமே இதுதான்.. சுட்டிக்காட்டிய சுனில் கவாஸ்கர்.. பும்ராவால் இப்படி ஒரு பிரச்சினையா?

நாக்பூர்: இந்திய அணியின் முக்கிய பலவீனம் என்னவென்பதை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended Video

Babar Azam - Mohammad Rizwan First Wicketற்கு 203 ரன்கள் அடித்து சாதனை!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நாக்பூரில் நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோற்ற நிலையில் இன்று கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“இந்திய அணியை யாராலும் காப்பாற்ற முடியாது”.. அடித்துக்கூறும் ஆர்.பி.சிங்.. காரணம் என்ன தெரியுமா??“இந்திய அணியை யாராலும் காப்பாற்ற முடியாது”.. அடித்துக்கூறும் ஆர்.பி.சிங்.. காரணம் என்ன தெரியுமா??

இந்திய அணி சொதப்பல்

இந்திய அணி சொதப்பல்

ஆசிய கோப்பை தொடரில் சொதப்பிய இந்திய அணி, ஆஸ்திரேலிய தொடரிலாவது கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் 208 ரன்களை குவித்தும் மோசமாக தோல்வியடைந்தது. கடைசி சில ஓவர்களில் பவுலிங் செய்யாதது தான் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் உண்மையான பலவீனம் குறித்து கவாஸ்கர் பேசியுள்ளார்.

கவாஸ்கர் விளக்கம்

கவாஸ்கர் விளக்கம்

இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவுக்கு வந்துள்ள பிரச்சினை புதிதல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அதாவது ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லையென்றால் ஆட்டம் கடினம் என நினைக்கிறார்கள். பும்ரா இருந்தால் எவ்வளவு குறைவான ஸ்கோரையும் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அவர் இல்லையென்றால் 200 ரன்களையும் கட்டுப்படுத்த முடிவதில்லை.

சரி செய்யுங்கள்

சரி செய்யுங்கள்

ஜஸ்பிரித் பும்ரா கண்டிப்பாக தேவை என்ற சூழல் இருந்த போதும், அவர் முழுமையாக குணமடைந்தால் மட்டுமே ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ கூறுகிறது. எனவே இதனை முதலில் சரி செய்ய வேண்டும். அவர் இல்லையென்றால் நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது. எப்படிபட்ட ஸ்கோரையும் கட்டுப்படுத்துவோம் என நினைக்க வேண்டும்.

2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும். இந்தியாவின் முன்னணி வீரராக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, September 23, 2022, 16:57 [IST]
Other articles published on Sep 23, 2022
English summary
Sunil gavaskar points out the team India's Weakness after continoues loss against Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X