மார்க் மை வேர்ட்ஸ்... வரலாற்றிலேயே இதுதான் சிறந்த அணியாக இருக்கும்....சுனில் கவாஸ்கர் உறுதி

அகமதாபாத்: தற்போது உள்ள இந்திய அணி தான் வரலாற்றில் சிறப்பான ஒரு அணியாக இருக்கும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 - 1 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடி வருகிறது.

இந்நிலையில் இதுவரை இருந்ததிலேயே மிகச்சிறப்பான ஒரு அணியாக தற்போதை இந்திய அணி உள்ளதாக சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

2வது நாளில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி... ரோகித், புஜாரா நிதான ஆட்டம்

 எப்படி?

எப்படி?

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதலில் தோல்வியை தழுவிய இந்திய அணி பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடரை வென்று அசத்தியது. அதே போல் தற்போதைய இங்கிலாந்து தொடரிலும் முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்தது. ஆனால் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

4வது டெஸ்ட்

4வது டெஸ்ட்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்து முதல் இன்னிங்ஸில் 205/10 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்வதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்.

சிறந்த அணி

சிறந்த அணி

இந்திய அணியின் வெற்றிகள் குறித்து பேசிய கவாஸ்கர், 1970 முதல் 90 வரை மேற்கிந்திய தீவுகள் அணி க்ளைவ் லாய்ட்ஸ் தலைமையில் சிறப்பான அணியாக திகழ்ந்தது. அதே போல் 1990 முதல் 2000ம் ஆண்டு காலக்கட்டங்களில் ஸ்டீவ் வாக்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக இருந்தது. அவை சிறப்பான அணியாக இருக்கலாம். ஆனால் தற்போதைய இந்திய அணி எங்கு சென்றாலும் வெற்றி பெறுகிறது. நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணிதான் மிகச் சிறந்த அணியாக இருக்கும். என தெரிவித்தார்.

தோனியின் சாதனை

தோனியின் சாதனை

இதுவரை 60 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 35 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்ளைவ் லாலிட்ஸை சமன் செய்வார். அவர் இதுவரை 36 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sunil Gavaskar's huge praise for Virat Kohli's Team India
Story first published: Friday, March 5, 2021, 14:04 [IST]
Other articles published on Mar 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X