For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஒத்திவைப்பால் ஒரு அணிக்கு மட்டும் கொண்டாட்டம்.. இனி கஷ்டமே இருக்காது.. கவாஸ்கர் கிண்டல்!

மும்பை: இந்தாண்டுகான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதில் ஒரு அணிக்கு மட்டும் படு கொண்டாட்டமாக இருக்கும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் போட்டிகள் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஐபிஎல் கனவு.. ஆசைக்கு 'ஆப்பு'.. வருமானம் போச்சே.. இலங்கை வாரியம் சோகம் ஐபிஎல் கனவு.. ஆசைக்கு 'ஆப்பு'.. வருமானம் போச்சே.. இலங்கை வாரியம் சோகம்

வரும் செப்டம்பர் மாதத்தில் போட்டிகளை நடத்தலாம் என பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் டி20 உலகக்கோப்பை இருப்பதால் அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் டாப் 3 இடங்களில் இருப்பதால் கோப்பையை வெல்ல கடும் போட்டி இருக்கிறது. இதற்காகவே ஐபிஎல்-ஐ மீண்டும் நடத்த வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். குறிப்பாக 'ஈ சாலா கப் நம்தே'

எனக்கூறிவிட்டு ஒவ்வொரு ஆண்டும் சொதப்பும் ஆர்சிபி அணி இந்தாண்டு படு தீவிர ஃபார்மில் உள்ளது. இதனால் இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதில் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.

ஐதராபாத் அணி

ஐதராபாத் அணி

இந்நிலையில் ஐபிஎல் தொடர் தடைபட்டுள்ளதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சன்ரைசரஸ் ஐதராபாத் அணிக்கு இந்த சீசனின் தொடக்கம் மிக மோசமாக அமைந்துவிட்டது. இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது அவர்கள் ஒரு வரம். தற்போது நிம்மதியாக இருப்பார்கள். பொறுமையாக பிரச்னைகளை சரிசெய்துக்கொள்ளலாம் எனத்தெரிவித்துள்ளார்.

புது சிக்கல்

புது சிக்கல்

எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஐதராபாத் அணி இந்தாண்டு மிக மோசமாக ஆடியது. 7 போட்டிகளில் விளையாடி வெறும் 1 ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புது சிக்கல்

புது சிக்கல்

ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டால் நியூசிலாந்து வீரர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள் எனத்தெரிகிறது. ஏனென்றால் நியூசிலாந்து அணி வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இதனால் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மீண்டும் ஒரு புதிய கேப்டனை தேட வேண்டும்.

Story first published: Friday, May 14, 2021, 11:17 [IST]
Other articles published on May 14, 2021
English summary
Sunil Gavaskar's Opinion on SRH managements mentality in IPL suspend!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X