ராகுலோட கேப்டன்ஷிப்... கும்ப்ளேவோட போராட்ட குணம்... வேற என்ன வேணும்... கவாஸ்கர் பாராட்டு

ஷார்ஜா : ஐபிஎல்லின் 46வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதவுள்ளது.

கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோற்கடித்தது.

இந்நிலையில் கேஎல் ராகுலின் வளர்ந்துவரும் கேப்டன்ஷிப் மற்றும் கோச் அனில் கும்ப்ளேவின் போராடும் குணம் அந்த அணிக்கு உத்வேகமாக உள்ளதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2 வருஷமா திரும்பியே பார்க்காத தோனி.. ஆனாலும் எவ்வளவு நம்பிக்கை பாருங்க ரூத்துராஜுக்கு.. பளீர் பேச்சு

மெதுவாக வேகமெடுத்துள்ளது

மெதுவாக வேகமெடுத்துள்ளது

ஐபிஎல்லில் மெதுவாக வேகமெடுத்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று பிளே-ஆப் கனவை நோக்கி நடைபோட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அணியை வலிமைபடுத்தும் ராகுல்

அணியை வலிமைபடுத்தும் ராகுல்

இந்த ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன்களை குவித்துள்ள கேஎல் ராகுல் தன்னுடைய அணியை போட்டிக்கு போட்டி வலிமைப்படுத்தி வருவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பஞ்சாப் அணி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்.

கும்ப்ளேவின் போராட்ட குணம்

கும்ப்ளேவின் போராட்ட குணம்

கேஎல் ராகுலின் வளர்ந்துவரும் கேப்டன்ஷிப் மற்றும் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் போராடும் குணம் ஆகியவை அந்த அணிக்கு தொடர்ந்து உத்வேகத்தை அளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆரம்பத்தில் சறுக்கினாலும் தற்போது வெற்றிக்கான வழியை அவர்கள் கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைப்பற்றிய பஞ்சாப் அணி

கைப்பற்றிய பஞ்சாப் அணி

ஒவ்வொரு முறையும் வெற்றியின் அருகில் சென்றுவிட்டு அதை தவறவிட்டுவந்த பஞ்சாப் அணி தற்போது வெற்றிக்கான சாவியை கைப்பற்றியுள்ளதாகவும் கடந்த சில போட்டிகளில் சிறப்பான கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருவதாகவும் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராகுலின் கேப்டன்ஷிப் திறமை

ராகுலின் கேப்டன்ஷிப் திறமை

கடந்த போட்டியில் 126 ரன்களை சேஸ் செய்தபோது அவர்களின் சுயநம்பிக்கை சிறப்பாக வெளிப்பட்டதாகவும் இறுதி இரண்டு ஓவர்களில் ராகுலின் சிறப்பான கேப்டன்ஷிப் திறமை வெளிவந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல அனில் கும்ப்ளேவின் பங்களிப்பையும் மறுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Do not forget the role of Anil Kumble -Sunil Gavaskar
Story first published: Monday, October 26, 2020, 14:55 [IST]
Other articles published on Oct 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X